பொழுதுபோக்கு
‘மை கேர்ள் ப்ரண்ட்’… பெண் குழந்தைக்கு தாயான வில்லி நடிகை; இன்ஸ்டா போஸ்ட் அப்டேட்ஸ்!
‘மை கேர்ள் ப்ரண்ட்’… பெண் குழந்தைக்கு தாயான வில்லி நடிகை; இன்ஸ்டா போஸ்ட் அப்டேட்ஸ்!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தான் 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறிய, சீரியல் நடிகை அகிலா தற்போது தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.சன் டி.வியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது சின்னத்திரை அறிமுகத்தை பெற்ற அகிலா, அதன்பிறகு, ராதிகா நடித்த செல்வி சீரியல் மூலம் சின்னத்திரை சீரியல்களில் நடிகையாக அறிமுகமானார். அந்த சீரியலை தொடர்ந்து, மலர்கள், ரோஜாக்கூட்டம், சிவசக்தி, கோலங்கள், திருமதி செல்வம், இளவரசி, உதிரிப்பூக்கள், கல்யாண பரிசு, சக்தி, அழகு, முந்தாணை முடிச்சு,அஞ்சலி, அபூர்வ ராகங்கள், அருந்ததி, முள்ளும் மலரும் போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.பாசிட்டிவ் நெகட்டிவ் என அனைத்து கேரக்டர்களில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் அகிலா, சன் டிவி மட்டும் இல்லாமல், ஜெயா டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் 40க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார். கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலகிய இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, டெலி விகடனுக்கு அளித்த பேட்டியில், கர்ப்பமாக இருந்தால் ஒருவருக்கு ஒருமுறைதான் வளைகாப்பு நடக்கும். ஆனால் எனக்கு தினம் தினம் வளைகாப்பு தான்.அபியும் நானும் சீரியலில் நடிக்கும்போது அந்த சீரியலின் இயக்குனர் எப்போமா என்னை தாய் மாமா ஆக்குவ என்று கேட்டுக்கொண்டே இருப்பார். சீரியலில் என்னுடன் நடித்த பல நடிகைள், எனக்கு தினம் தினம் வளைகாப்பு நடத்தி வருகிறார்கள். எனக்கு 27 வயதில் ஒரு பொண்ணு இருக்கா, அவள் பெயர் அஸ்வதி. மலர் சீரியலில், ஹீரோயின் அவள் தான். அவளும் எனக்கு நண்பர்களும் சேர்ந்து வளைகாப்பு செய்தார்கள் என்று கூறியிருந்தார். A post shared by NIDHISH V B (@iamnidhishvb)இதனிடையே தற்போது தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அகிலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதற்கு முன்பு, தனது வளைகாப்பு தொடர்பான புகைப்படங்களை வெளியிட்ட அகிலாவுக்கு, ரசிகர்கள் நெட்டிசன்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவர் பெண் குழந்தைக்கு தாயானது குறித்தும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
