இலங்கை
வல்வெட்டித்துறையில் டெங்கு பெருகும் சூழல் 8,000 ரூபா தண்டம்!
வல்வெட்டித்துறையில் டெங்கு பெருகும் சூழல் 8,000 ரூபா தண்டம்!
வல்வெட்டித்துறை நகரசபைக்குட்பட்ட பகுதியில் டெங்குநுளம்பு பெருகக்கூடிய சூழலைப் பேணிய 10 ஆதன உரிமையாளர்களுக்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றால் தலா 8 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை தொண்டைமனாறு கிராம அலுவலர் பிரிவில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் உள்ளிட்ட குழுவினரால் கடந்த வியாழக்கிழமை டெங்குக் கட்டுப்பாட்டுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது நுளம்பு பெருகக்கூடியவாறான சூழலினை வைத்திருந்த 10 ஆதன உரிமையாளர்களுக்கு எதிராக வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ப. தினேஸினால் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குற்றஞ்சாட்டப்பட்ட அனைத்து ஆதன உரிமையாளர்களும் குற்றத்தை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில், தலா 8 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அடிப்படையில் மொத்தமாக 80 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
