இலங்கை
Miss Grand International அழகிப் போட்டியில் பங்குபற்றும் இலங்கைப் பெண்
Miss Grand International அழகிப் போட்டியில் பங்குபற்றும் இலங்கைப் பெண்
தாய்லாந்தில் நடைபெறவுள்ள 12வது Miss Grand International – 2025 அழகிப் போட்டியில் இலங்கையை சேர்ந்த திஷானி பெரேரா என்ற பெண் ஒருவர் பங்குபற்றவுள்ளார்.
இந்த அழகிப் போட்டியில் பங்குபற்றுவதற்காக அவர் இன்று அதிகாலை 1:30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து நோக்கி புறப்பட்டுள்ளார்.
இந்த அழகிப் போட்டின் சுற்றுக்கள் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்தில் செப்டம்பர் 30 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 18 வரை நடைபெறவுள்ளது.
இந்த அழகிப் போட்டியில் 100 இற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
