Connect with us

பொழுதுபோக்கு

இந்த டைலாக் நான் பேசுனா எப்படி இருக்கும்? கமலின் ஹிட் பட வசனத்தை பேசி காட்டிய ரஜினி: எந்த படம் தெரியுமா?

Published

on

Kamal jhas

Loading

இந்த டைலாக் நான் பேசுனா எப்படி இருக்கும்? கமலின் ஹிட் பட வசனத்தை பேசி காட்டிய ரஜினி: எந்த படம் தெரியுமா?

அஜித் நடிப்பில் காதல் மன்னன், அமர்க்களம், அசல், அட்டகாசம் என தொடர் வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் சரண், கமல்ஹாசன் நடிப்பில், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படதமாக அமைந்த நிலையில், கமல்ஹாசன் படத்தை இயக்கினால் அடுத்து ரஜினிகாந்த் படம் இயக்க வாய்ப்பு கிடைக்கும். இப்படி எதாவது நடந்ததா என்ற கேள்விக்கு சரண் பதில் அளித்துள்ளார்.சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசிய அவர், நான் ரஜினிகாந்த் படத்தை இயக்க ஒரு முயற்சி வெளியிலிருந்து ஒரு பக்கம் எடுத்தாங்க. அப்போது  நான் அஜித் நடிப்பில் ‘ஏறுமுகம்’ (Air Mugam) படம்ஸ்டார்ட் பண்ணியிருந்தேன். எனக்கு ரஜினிகாந்தை  நேரில் பார்க்கவே பயம். அவர் ப்ராஜெக்ட்டுக்காக கூப்பிட்டாரா, இல்லையான்னு எனக்குத் தெரியாது. ‘கூப்பிட்டார்’ என்று சொன்னார்கள். வசூல் ராஜா படம் அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. இது நான் பண்ணியிருந்தா எப்படிப் பண்ணியிருப்பேன் தெரியுமா?’ என்று உதவி இயக்குனர்களிடம் கூறியிருந்தார்.என் மேல் நல்ல மதிப்பு வைத்திருந்தார், ஏன்னா, நான் அதிகமா பேச மாட்டேன். அதிகமா எங்கேயும் கலந்துக்க மாட்டேன். அதெல்லாம் அவர் கேட்டிருக்கார். ஒரு தடவை கே.பி.சாரிடம் வேலை பார்க்கும்போது, குமுதம் இதழ் ஒன்று தயாரித்தார்,  அதில் ரஜினிக்கு கேட்க வேண்டிய கேள்விகளை என்னிடம் கொடுத்து ஆனுப்ப சொன்னார், நீங்கள் வந்தால் எனக்கு பயமாக இருக்கும் என்று கே.பி சாரை வர வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அடுத்த நாள் நான் அவரிடம் ஒரு தனிப்பட்ட கேள்வி கேட்டேன்.எல்லா சூப்பர் ஸ்டார்க்கும் பொருந்தும். ஒரு படம் ரிலீஸ் ஆகும்போது, அவருடைய ஃபேன்ஸ் எல்லாருமே அவருடைய எண்ணம் முழுக்க அவர் மேல குவியும். அந்த தாக்கம் உங்களுக்கு ஃபீல் பண்ண முடியுமா? என்று கேட்டேன். அதற்கு அவர் ‘கண்டிப்பா முடியும். அந்த வைப்ரேஷன் வரும்’ என்று சொன்னார். அவ்வளவு பேரும் அவரைப் பத்தி ‘திங்க்’ பண்ணுவாங்க என்ற அந்த ஒரு விஷயம். குறிப்பாக ஒரு படம் ரிலீஸ் ஆகிற அன்னிக்கு, மொத்த எண்ணக் குவியலும் அவர்மேல் இருக்கும் என்று கூறியிருந்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன