Connect with us

தொழில்நுட்பம்

நாளை முதல் உயரும் ஆதார் கட்டணம்: பெயர், பயோமெட்ரிக் அப்டேட் செய்ய எவ்வளவு செலவாகும்?

Published

on

UIDAI Sets Phased Aadhaar Service Fee

Loading

நாளை முதல் உயரும் ஆதார் கட்டணம்: பெயர், பயோமெட்ரிக் அப்டேட் செய்ய எவ்வளவு செலவாகும்?

இந்தியக் குடிமக்களின் அடையாள ஆவணமாகப் பயன்படும் ஆதார் அட்டை, அரசு நலத்திட்டங்கள், வங்கிக் கணக்கு, ரேஷன் அட்டை, இபிஎப் கணக்கு, எல்.பி.ஜி மானியம், ஸ்காலர்ஷிப் என பல முக்கியத் துறைகளில் இன்றியமையாத பங்கினை வகிக்கிறது. இந்நிலையில், ஆதார் அட்டை சேவைகளுக்கான கட்டணங்கள் நாளை முதல் (அக்.1-ம் தேதி) முதல் உயர்த்தப்பட உள்ளன. ஆனாலும், இந்த கட்டண உயர்வு சிறிய அளவில் மட்டுமே இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் பதிவு மையங்களில் வழங்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்களை 2 கட்டங்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. முதற்கட்ட கட்டண உயர்வு நாளை முதல் (அக்டோபர் 1, 2025) முதல் அமலுக்கு வருகிறது.இந்த கட்டண உயர்வு செப்.30, 2028 வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.2-ம் கட்ட கட்டண உயர்வு (அக்.1, 2028 முதல்)2-வது கட்டண உயர்வு அக்டோபர் 1, 2028 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜனரஞ்சக மாற்றங்களுக்கான கட்டணம் ரூ.90 ஆகவும், பயோமெட்ரிக் மாற்றங்களுக்கான கட்டணம் ரூ.150 ஆகவும் உயர்த்தப்படும். இந்த கட்டணங்கள் செப்டம்பர் 30, 2031 வரை நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குழந்தைகளுக்கான கட்டணம் மற்றும் இலவசச் சேவைகள்புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது தொடர்ந்து இலவசமாகவே இருக்கும். 5 முதல் 7 வயதுக்குள்ளான குழந்தைகளுக்கும், 15 முதல் 17 வயதுக்குள்ளான டீன்ஏஜர்களுக்கும் செய்யப்படும் கட்டாய பயோமெட்ரிக் மாற்றங்கள் தொடர்ந்து இலவசமாகவே வழங்கப்படும். இந்தச் செலவை (யு.ஐ.டி.ஏ.ஐ) ஏற்கும்.7 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகள் மற்றும் 17 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பயோமெட்ரிக் மாற்றங்கள் திருத்தப்பட்ட கட்டணத்தின் (ரூ.125/ரூ.150) கீழ் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யு.ஐ.டி.ஏ.ஐ. ஆனது 7 வயதிற்குள் குழந்தைகளுக்குக் கட்டாய பயோமெட்ரிக் அப்டேட் செயல்படுத்துவதால், இந்த மாற்றம் குடும்பங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.யு.ஐ.டி.ஏ.ஐ டிஜிட்டல் சேனல்களில் தனது கவனத்தை அதிகப்படுத்துகிறது. myAadhaar போர்டல் வழியாக இலவச ஆன்லைன் “ஆவண அப்டேட்” வசதி ஜூன் 14, 2026 வரை கிடைக்கும். அதன் பிறகு, அதற்கும் கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளது. பதிவு மையங்களில் மேற்கொள்ளப்படும் ஆஃப்லைன் ஆவணப் புதுப்பிப்புகளுக்கு ஏற்கனவே கட்டணம் உண்டு. யு.ஐ.டி.ஏ.ஐ. தற்போது பயோமெட்ரிக் மாற்றங்களைக் கட்டாயமாக்குவது, பள்ளி அடிப்படையிலான பதிவு இயக்கங்கள், புதிய முக அங்கீகார முறைகளை அறிமுகப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன