இலங்கை
மணல் கடத்தல் முறியடிப்பு; பளை – சோரன்பற்று வீதியில் குவியல் குவியலாக மணல்
மணல் கடத்தல் முறியடிப்பு; பளை – சோரன்பற்று வீதியில் குவியல் குவியலாக மணல்
பளை சோரன்பற்றுப் பகுதியில், மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர்களை பொலிஸார் விரட்டியபோது, அவர்கள் வீதியில் மணலைக்
கொட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
பளை பிராந்தியத்தில் இடம்பெறும் மணற் கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக, பொலிஸார் அண்மைக்காலமாக சிறப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறாக, நேற்றுமுன்தினம் இரவு மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பரொன்றை கையும்மெய்யுமாக பிடிக்க முற்பட்டபோதே, தகவலறிந்த கடத்தல்காரர்கள் மணலை வீதியில் கொட்டிவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.
நாளாந்தம் வடமராட்சி கிழக்கில் இருந்து தமது கிராமத்தின் ஊடாக மணற்கடத்தல் இடம்பெறுகின்றது என்று சோரன்பற்று மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தொடர்ச்சியான நடவடிக்கைகள் மூலம் மணற் கடத்தலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
