Connect with us

சினிமா

10 வகுப்பில் 54% மார்க்!! பள்ளி முதல்வரிடம் அறைவாங்கிய நடிகர் இப்போ கோடீஸ்வரன்..

Published

on

Loading

10 வகுப்பில் 54% மார்க்!! பள்ளி முதல்வரிடம் அறைவாங்கிய நடிகர் இப்போ கோடீஸ்வரன்..

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வருபவர் தான் ரன்பீர் கபூர். பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள ரன்பீர் கபூர், நடிகை ஆலியா பட்டை காதலித்து திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.இந்நிலையில் சமீபத்தில் ரன்பீர் கபூர் அளித்த பேட்டியொன்றில் தன்னுடைய பள்ளி பருவம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில் பள்ளியில் எப்போதும் நம்மை வித்தியாசமாக நடத்துவதில்லை. 40 மாணவர்களில் நீங்கள் சிறப்பு வாய்ந்தவராக உணரும்போது, மற்றவர்கள் உங்களை ஆர்வக்கோளாறு என்று கூறுவார்கள். நான் படித்தப்பள்ளி மிகவும் கண்டிப்பான பள்ளி.நான் பள்ளி முதல்வரிடம் நிறைய அடிவாங்கியிருக்கிறேன். ஒருமுறை பள்ளி முதல்வர் என்னை கன்னத்தில் அறைந்தார். நான் நன்கு படிக்கும் மாணவன் எல்லாம் இல்லை. வகுப்பில் கடைசி மூன்று பேரில் ஒருவனாக உட்காருவேன். பாடங்களில் தோல்வி அடையமாட்டேன்.என் 10 ஆம் வகுப்பில் 54.3 சதவிகிதம் மதிப்பெண் பெற்றபோது என் அம்மா மும்பையிலிருந்து அழுதுகொண்டே எனக்கு போன் செய்தார். நான் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதை அவரால் நம்ப முடியவில்லை. ஏனென்றால் எங்கள் குடும்பத்தில் பள்ளியில் தேர்ச்சி பெற்றது நான் மட்டும் தான் என்று ரன்பீர் கபூர் அந்த பேட்டியில் பகிந்துள்ளார்.தற்போது, இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரூ. 4000 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள ராமாயணா திரைப்படத்தில் நடித்து வருகிறார் ரன்பீர் கபூர். இரு பாகங்களாக வெளியாகவுள்ள இப்படம் அடுத்த ஆண்டு தீபாவளி அன்று முதல் பாகம் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்காக ரன்பீர் கபூர் ரூ. 150 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன