பொழுதுபோக்கு
40 வருட ஜெபம், இறந்தவர் கழுத்தில் இருந்து எடுத்தது; தனுஷ் அணிந்திருக்கும் மாலை வரலாறு தெரியுமா?
40 வருட ஜெபம், இறந்தவர் கழுத்தில் இருந்து எடுத்தது; தனுஷ் அணிந்திருக்கும் மாலை வரலாறு தெரியுமா?
தனுஷ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் தயாராகியுள்ள இட்லி கடை திரைப்படம், பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனுஷ் தான் அணிந்திருக்கும் மாலை குறித்து கூறியுள்ள தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் சினிமாவில், நடிகர், பாடகர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் தனுஷ். இவர் 4-வது திரைப்படமாக இட்லி கடை என்ற படத்தை இயக்கியுள்ளார். ராஜ்கிரணன், அருண் விஜய், நித்யா மேனன், சத்யராஜ், சமுத்திரக்கனி, பார்த்திபன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தில், தனுஷ் முருகன் என்ற கேரக்டரில் நடிதம்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, இந்த படம் நாளை (அக்டோபர் 1) வெளியாக உள்ள நிலையில், தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய தனுஷ் தான் அணிந்திருக்கும் மாலை குறித்த ரகசியத்தை உடைத்துள்ளார். தனுஷ் இந்த மலையை போட்டதில் இருந்து சமூகவலைதளங்களில், இந்த மாலை தொடர்பான தகவல்கள் அதிகமாக பரவிய நிலையில், இது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.இதில் பேசிய அவர், இது எனன மாலை என்று எனக்கு தெரியாது. ஒருமுறை என் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்று அவரை பார்க்க ஊருக்கு போனேன். அப்போது எங்க தாத்தா போட்டோவில் இந்த மாலை இருந்தது. இந்த மாலை வாங்கியதா? இல்லை தாத்த போட்டு இருந்தாரா என்று கேட்டேன். அதற்கு என் பாட்டி, எங்க தாத்தா 30-40 வருஷம் ஜெபம் செய்த மாலை, அவர் இறந்தபிறகு எடுத்து அவரது போட்டோவுக்கு போட்டிருக்கிறேன் என்று சொன்னார், இதை நான் எடுத்துக்கொள்ளலாமா எனக்கு தருவியா என்று நான் கேட்டேன்.அப்போது எங்க பாட்டி என் தாத்தா படத்திற்கு முன்பு நின்று, மாமா பாத்திங்களா இந்த மாலையை இவன் கேட்கிறான். உங்களுக்கு எத்தனையோ பேர பிள்ளைகள் இருக்காங்க, ஆனால் இவன் தான் வந்து இந்த மாலை வேண்டும் என்று கேட்கிறான் என்று சொல்லிவிட்டு, அந்த மாலையை எடுத்து மந்திரிச்சு, எனக்கு வியூதி போட்டு மாலையை கழுத்தில் போட்டுவிட்டாங்க, அப்போதில் இருந்து எனது முன்னோர்களும், அவர்களது ஆசீர்வாதங்களும், என் கூடவே என்னை பாதுகாத்துக்கொண்டு இருப்பதாக எனக்கு ஒரு ஃபீலிங், அதனால் இதை நான் போட்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
