இலங்கை
அரசின் போலிச்சாயம் மன்னாரில் வெளுத்தது; நாமல் தெரிவிப்பு!
அரசின் போலிச்சாயம் மன்னாரில் வெளுத்தது; நாமல் தெரிவிப்பு!
மன்னார் காற்றாலைத்திட்டம் தொடர்பில் பொதுமக்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் மதகுருமார்களுடன் கலந்துரையாடுவது அவசியம். மன்னார் காற்றாலைத் திட்டத்துக்கான ஜனாதிபதியின் உத்தரவு மக்களின் விருப்பங்களை நேரடியாக பாதிக்கின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை முன்னெடுக்கக்கூடாது. அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்துக்கு எதிராக பொலிஸார் கடுமையாக நடந்து கொண்டமை கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சியில் இருந்தபோது, வெளிநாட்டு முதலீடுகளை எதிர்த்துக்குரல் கொடுத்த தேசிய மக்கள் சக்தி, தற்போது ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இத்தகைய திட்டங்களை முன்னெடுப்பது அநாகரிகம் – என்றார்.
