பொழுதுபோக்கு
காதல் தோல்வி… 83 வயது தாத்தா சொன்ன அட்வைஸ்: அஸ்வத் மாரிமுத்து ஓபன்!
காதல் தோல்வி… 83 வயது தாத்தா சொன்ன அட்வைஸ்: அஸ்வத் மாரிமுத்து ஓபன்!
தமிழ் சினிமாவில் தனது முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு நடிகர்கள் அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் வெளியான ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ‘டிராகன்’ திரைப்படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.இதையடுத்து, இயக்குநர் அஸ்வத மாரிமுத்து நடிகர் சிம்புவின் 51-வது படத்தை இயக்கவுள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் கதையை எழுதி முடிக்கவில்லை என்று இயக்குநர் கூறியுள்ளார்.அதாவது, டிராகன்’ திரைப்படத்திற்காக ஒன்றரை ஆண்டுகள் செலவழித்ததால் குடும்பத்துடன் நேரம் செலவழித்து வருவதாகவும் இதனால் கதையை முழுமையாக முடிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது காதல் தோல்வியின் போது 83 வயது தாத்தா ஒருவர் தனக்கு கொடுத்த அட்வைஸ் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “எப்போதும் நமக்காக நாம் வாழ வேண்டும். காதல் செய்வது என்றால் உண்மையாக காதல் செய்யுங்கள். இல்லையென்றால் காதல் செய்ய வேண்டாம். எனக்கு பிரேக் அப் ஆனபோது ஒரு தாத்தா என்னை பார்த்து ஒரு வார்த்தை சொன்னார். தம்பி நீ இப்படி தாடி எல்லாம் வைத்து இருந்தால் நல்லவேளை பிரேக்அப் பண்ணிவிட்டோம் என்று அந்த பொண்ணு நினைப்பார். நீ வாழ்க்கையில் கொஞ்சம் முன்னுக்கு வந்து ஜெயித்தால் தான் அய்யயோ இந்த பையனை விட்டுட்டோமே என்று அந்த பொண்ணு வருத்தப்படும். அப்படி முன்னுக்கு வா என்றார். அதனை சீரியஸாக எடுத்துக் கொண்டேன். அதன்பிறகு தான் ‘ஓ மை கடவுளே’ படங்கள் எல்லாம் செய்தேன். எப்போதும் நம்மளை நாமே வருத்திக் கொள்ளக் கூடாது. தாடி வைத்துக் கொண்டு என்ன ஆனாலும் பரவாயில்லை என்று இருக்கக் கூடாது” என்றார்.“
