வணிகம்
மாருதி டிசையர் காருக்கு பம்பர் சலுகை: ஜி.எஸ்.டி 2.0-ல் ரூ.88,000 வரை அதிரடி விலை குறைப்பு
மாருதி டிசையர் காருக்கு பம்பர் சலுகை: ஜி.எஸ்.டி 2.0-ல் ரூ.88,000 வரை அதிரடி விலை குறைப்பு
மத்திய அரசின் ஜி.எஸ்.டி 2.0 சீர்திருத்தங்கள் காரணமாக, இந்தியாவில் பல கார் மாடல்களின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளன. இதில், வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்த விலை குறைப்பு, அதிகம் விற்பனையாகும் சப்-400 மீட்டர் கார் பிரிவிலுள்ள மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் டிசையர் (Maruti Suzuki Swift Dzire) மாடலில் ஏற்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரி விகித திருத்தங்களால், இந்த காரின் விலையில் ரூ.80,000 வரை குறைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புதிய வரி விகிதங்கள் அனைத்து வகைக் கார்களுக்கும் விலை குறைப்பை அளித்துள்ளன. ஹேட்ச்பேக் கார்கள், இவற்றின் விலையில் சுமார் ரூ.40,000 வரை சேமிப்பு கிடைக்கிறது.பிரீமியம் சொகுசு எஸ்.யூ.வி (Premium Luxury SUV): இந்த வகை கார்களுக்கு நம்ப முடியாதளவில் ரூ.30 லட்சம் வரை விலை நன்மை கிடைக்கிறது. வாகனத் துறையில் இந்த வரித் திருத்தங்கள் இந்திய ஆட்டோமொபைல் துறையின் மிகப்பெரிய விலை மாற்றங்களில் ஒன்றாக கருதப்படுகிறது எனத் தொழில் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.மாருதி சுஸுகி டிசையர் மாடலில் கிடைக்கும் அதிகபட்ச விலை நன்மை ரூ. 88,000 ஆகும். அதிகபட்ச சலுகை (ரூ. 88,000) இந்த காரின் உயர் ரக மாடலான ZXI ப்ளஸ் ட்ரிம்-மில் கிடைக்கிறது. இதே நிலைதான் இதன் மற்றொரு மாடலான ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக்கிலும் இருந்தது. மாருதி சுஸுகியின் மற்ற ஹேட்ச்பேக்குகள் போல் அல்லாமல், இந்த 2 மாடல்களிலும் உயர் ரக மாடலுக்கே அதிகபட்ச ஜி.எஸ்.டி விலைக் குறைப்பு கிடைத்துள்ளது. குறைந்தபட்ச சலுகையாக டிசையர் காரின் வகையைப் பொறுத்து, விலை குறைப்பு ரூ. 58,000 முதல் ரூ. 88,000 வரை மாறுபடுகிறது. ஏ.எம்.டி. வேரியண்ட் டிரான்ஸ்மிஷன் வகைகளில் விலை குறைப்பு ரூ.72,000 முதல் ரூ.88,000 வரை உள்ளது.புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர், பல டிசைன் மற்றும் அம்ச அப்டேட்களுடன் வந்துள்ளது. இதில் முந்தைய 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினுக்குப் பதிலாக, முற்றிலும் புதிய Z சீரிஸ் 1.20 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. புதிய டிசையர், குளோபல் என்சிஏபி (GNCAP) மற்றும் பாரத் என்சிஏபி (BNCAP) ஆகிய இரண்டிலும் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இதன் மூலம், மாருதி சுஸுகி மாடல்களில் 5 ஸ்டார் GNCAP மற்றும் BNCAP மதிப்பீட்டைப் பெற்ற முதல் மாடல் என்ற பெருமையை டிசையர் பெற்று உள்ளது.பெட்ரோல் எஞ்சினுடன் கூடுதலாக, புதிய டிசையர் நிறுவனத்தால் நிறுவப்பட்ட சிஎன்ஜி கிட் (Factory-installed CNG kit) விருப்பத்துடனும் கிடைக்கிறது. டிசையர் கார் அதிகளவில் டாக்சி பிரிவில் விற்பனையாகி வருகிறது. இந்த மேம்படுத்தல்கள் மற்றும் ஜி.எஸ்.டி விலைக் குறைப்பு காரணமாக, தனியார் வாடிக்கையாளர் பிரிவிலும் இதன் விற்பனை மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. பண்டிகைக் காலச் சலுகைகளுடன் இந்த விலை குறைப்பு விற்பனையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
