Connect with us

தொழில்நுட்பம்

விக்கிபீடியாவை காலி செய்ய வரும் ‘க்ரோகிபீடியா’… எலான் மஸ்கின் அடுத்த அதிரடி!

Published

on

Grokipedia

Loading

விக்கிபீடியாவை காலி செய்ய வரும் ‘க்ரோகிபீடியா’… எலான் மஸ்கின் அடுத்த அதிரடி!

உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் (Elon Musk), தனது எக்ஸ்ஏஐ நிறுவனம் மூலம் ‘க்ரோகிபீடியா’ (Grokipedia) என்ற புதிய ஏ.ஐ. தளத்தை உருவாக்கவுள்ளதாக அறிவித்து உள்ளார். இந்த புதிய தளம், தற்போதுள்ள இணைய கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவுக்கு (Wikipedia) மாற்றாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எலான் மஸ்க் இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டபோது, நாங்க எக்ஸ்.ஏஐ மூலம் க்ரோகிபீடியா உருவாக்கி வருகிறோம். இது விக்கிபீடியா-ஐ விட மிகப்பெரிய வளர்ச்சி கொண்டதாக இருக்கும் என்று உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், பிரபஞ்சத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்ற எக்ஸ் ஏ.ஐ-ன் இலக்கை நோக்கிய முக்கியமான பணி இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இணைய கலைக் களஞ்சியமான விக்கிபீடியாவையும், அதை இயக்கும் விக்கிமீடியா (Wikimedia) என்ற இலாப நோக்கற்ற அமைப்பையும் எலான் மஸ்க் நீண்ட காலமாகவே விமர்சித்து வருகிறார். இந்த அமைப்பு இடதுசாரி சித்தாந்தச் சார்புடன் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டுகிறார். விக்கிபீடியாவை அவர் கேலியாக ‘வோக்கிபீடியா’ (Wokipedia), ‘டிக்கிபீடியா’ (Dickipedia) என்றும் விமர்சித்துள்ளார். 2023-ம் ஆண்டு, விக்கிபீடியாவின் பெயரை ‘டிக்கிபீடியா’ என்று மாற்றினால், அதற்கு 1 பில்லியன் டாலர் வழங்குவதாகவும் அவர் நகைச்சுவையாகப் பேசினார்.புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ‘க்ரோகிபீடியா’ என்ற பெயர், எலான் மஸ்கின் சொந்த ஏ.ஐ. தளமான ‘Grok’-ல் இருந்து உருவானது. இந்த க்ரோக் AI, சமூக ஊடகதளமான ‘X’-ல் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. க்ரோக், தான் குற்றம் சாட்டிய இடதுசாரி சார்பை எதிர்கொள்ளும் என்றும், சர்ச்சைக்குரிய விஷயங்களிலும் உண்மையைச் சொல்லும் என்றும், அரசியல் சரித்தன்மைக்கு (Political Correctness) கட்டுப்படாது என்றும் மஸ்க் கூறியிருந்தார். இருப்பினும், இந்த க்ரோக் ஏ.ஐ. எதிர்பார்த்தபடி செயல்படவில்லை.எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டிரம்ப், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகிய மூவரும் அமெரிக்காவுக்கு அதிகம் தீங்கு விளைவித்தவர்கள் என்று க்ரோக் ஏ.ஐ. கூறியது சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், விக்கிபீடியாவுக்கு மாற்றாக க்ரோகிபீடியா உருவாக்கும் பணி, எக்ஸ்.ஏ.ஐ நிறுவனத்தின் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன