சினிமா
இட்லி கடைக்கு ஆதரவாக காந்தாராக்கு நெகடிவ் ரிவியூவா…? ப்ளூ சட்டை மாறன் சம்பவம்
இட்லி கடைக்கு ஆதரவாக காந்தாராக்கு நெகடிவ் ரிவியூவா…? ப்ளூ சட்டை மாறன் சம்பவம்
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த திரைப்படம் தான் காந்தாரா. இந்த படம் 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சுமார் 400 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றது. இதைத்தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் நேற்றைய தினம் வெளியானது. இந்த நிலையில், ‘காந்தாரா சாப்டர் 1’ படத்திற்கு தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். அவர் கொடுத்த விமர்சனத்தை பார்ப்போம். அதில் அவர் கூறுகையில் , ஈஸ்வரா பூந்தோட்டம் என்ற பகுதியில் கதை தொடங்குகின்றது. அங்கு மிளகு, ஏலக்காய், தேன், பட்டை போன்ற அரிய வகைப் பொருட்கள் கிடைக்கின்றன. அந்தப் பகுதியில் தெய்வ சக்தியும் காணப்படுகின்றது. இதனால் இந்த இடத்தை ஆட்டையை போடுவதற்காக இரண்டு குழுக்கள் முயற்சி செய்கின்றன. அதில் ராஜா ஒருவரும் அடங்குகின்றார். இதற்கு இடையில் நடக்கும் போரில் அங்குள்ள மக்களை தெய்வம் காப்பாற்றுகின்றதா? இல்லையா? என்பதுதான் இந்த படத்தின் கதை. காந்தாரா படத்தின் முதலாவது பாகத்தின் ஒவ்வொரு சம்பவத்தையும் பார்க்கும்போது உண்மையை போலவே இருக்கும். அதுதான் அந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. அதன் கிளைமேக்ஸ் கூட ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. ஆனால் காந்தாரா சாப்டர் ஒன் ஒரு ஃபேன்ஸி திரைப்படமாக இருக்கின்றது . இந்த படத்தில் வரும் தெவாங்கு, புலி, குதிரை என்பன ஏன் வருகிறது என்று தெரியவில்லை. படத்தின் முதல் பாதியின் கதையும் புரியவில்லை. படம் முடிவதற்கு ஒரு அரை மணி நேரம் போல தான் படத்தின் கிளைமாக்ஸ் சூடு பிடிக்கின்றது. அந்தப் படத்தில் இடம் பெற்றது போலவே ரிஷப் ஷெட்டி சாமி வந்து கத்துகின்றார். ஆனால் காந்தாரா முதல் படத்தில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட நம்பிக்கை வந்துவிடும் அளவிற்கு இருந்தது. ஆனால் இந்த படத்தில் அப்படி இல்லை. சாதாரண ரசிகர், தீவிரமான பக்தர்களுக்கு இந்த படம் பிடிச்சிருந்தால் மேலும் ஓட வாய்ப்பு இருக்கு. சாதாரண மக்களால் இந்த படத்தை பார்ப்பது கொஞ்சம் கஷ்டம் தான். சண்டைக்காட்சிகளில் கூட காமெடி பண்ணி இருக்கின்றார்கள். டெக்னிக்கல் சைட் நன்றாக உள்ளது என தெரிவித்துள்ளார். இதேவேளை ப்ளூ சட்டை வழங்கிய இந்த விமர்சனங்களை பார்த்த ரசிகர்கள், காந்தாரா சாப்டர் ஒன் படம் நன்றாக தான் இருக்கிறது. ஆனால் நீங்க இட்லி கடை படத்திற்கு ஆதரவாக காந்தாரா படத்திற்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் கொடுக்கிறீங்களா என விளாசி வருகின்றனர்.
