சினிமா
இமான் இசையில் சின்மயி ரீ என்ட்ரி.! ரசிகர்களை குஷிப்படுத்திய லேட்டஸ்ட் அப்டேட்.!
இமான் இசையில் சின்மயி ரீ என்ட்ரி.! ரசிகர்களை குஷிப்படுத்திய லேட்டஸ்ட் அப்டேட்.!
தமிழ் சினிமாவில் புதிய தயாரிப்பு நிறுவனமாக உருவாகியுள்ள மாசாணி பிக்சர்ஸ், தனது முதல் முயற்சியாக தயாரிக்கும் திரைப்படம் தான் ‘வடம்’. பலரின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தில், முன்னணி நடிகரான விமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குநர் V. கேந்திரன் இயக்கும் இப்படம், தமிழனின் வீர விளையாட்டான மஞ்சு விரட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது.இப்படம் காதல், நட்பு, மரபு மற்றும் உணர்வுகளை இணைத்து, ஒரு கமர்ஷியல் சினிமாவாக உருவாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்துக்கான இசையை அமைக்கும் இசையமைப்பாளர் டி. இமான், தனது ‘X’ தளப்பக்கத்தில் ஒரு முக்கியமான அப்டேட்டை பகிர்ந்துள்ளார். அதில், பாடகி சின்மயி ‘வடம்’ திரைப்படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.இதனால், சின்மயியின் ரசிகர்கள் மட்டுமல்லாது, இசை ரசிகர்களிடையிலும் பெரும் பரவசம் ஏற்பட்டுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு, முக்கியமான தமிழ் திரைப்படத்தில் சின்மயி பாடியிருப்பது, பலருக்கும் ஆச்சர்யம் மற்றும் மகிழ்ச்சி தரும் செய்தியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சின்மயியின் குரல் பெரிதாக திரைப்படங்களில் இடம்பெறவில்லை.ஆனால், இப்போது இமானுடன் மீண்டும் இணைவது, அவர் குரலின் அழகு மற்றும் பெருமை இன்னும் தமிழ் சினிமாவிற்கு தேவையானது என்பதை நிரூபிக்கிறது.
