பொழுதுபோக்கு
இளைஞர்களை ஈர்த்த நடிகை, தமிழில் நடித்தது ஒரு படம் தான்; இவரது அக்கா தனுஷ் படத்தில் வில்லி: இந்த நடிகை யார் தெரியுமா?
இளைஞர்களை ஈர்த்த நடிகை, தமிழில் நடித்தது ஒரு படம் தான்; இவரது அக்கா தனுஷ் படத்தில் வில்லி: இந்த நடிகை யார் தெரியுமா?
சினிமாவை பொறுத்தவரை சகோதரிகள், சகோதரர்கள் திரையுலகில் நடிப்பது வழக்கம் தான். ஆனாலும் இவருவரும் ஒரே மாதிரியான முன்னேற்றத்தை சந்திப்பார்களா என்பது கேள்விக்குறிதான். அந்த வகையில், இந்தி சினிமாவில், கொடிகட்டி பறந்துவரும் ஒரு நடிகை தமிழில் 2 படங்கள் மட்டுமே நடித்துள்ளார். அவரது தங்கை ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார். இவர்கள் யார் தெரியுமா?கடந்த 2007-ம் ஆண்டு வினய் நடிப்பில் வெளியான படம் உன்னாலே உன்னாலே. காதல், காமெடி, ஆண் பெண் இருவருக்கும் இடையிலான மோதல் என படம் முழுக்க ஜாலியான மோடில் செல்லும் இந்த படத்தை இயக்கியவர் ஜீவா. ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை சதா. ஆனால் இவரை விடவும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் இந்த படத்தின் க்ளைமேக்ஸில் வினயை திருமணம் செய்துகொள்ளும் கேரக்டரில் நடித்திருந்த தீபிகா என்ற கேரக்டர் தான். இந்த கேரக்டரில் நடித்து அசத்தியவர் நடிகை தனிஷா முகர்ஜி. பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக உச்சம் தொட்ட நடிகை கஜோலின் சகோதரி தான் இவர். 1997-ம் ஆண்டு தமிழில் மின்சார கனவு என்ற படத்தில் கஜோல் நாயகியாக நடித்திருந்தார்.அதன்பிறகு பல வருட இடைவெளிக்கு பிறகு, 2017-ம் ஆண்டு வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் தனுஷ்க்கு வில்லியாக நடித்திருந்தார். அக்கா தமிழில் 2 படங்கள் நடித்திருந்தாலும், அவரது தங்கையான தனிஷா அறிமுகமான உன்னாலே உன்னாலே படம் தான் அவர் முதலும் இறுதியுமாக நடித்த கடைசி தமிழ் படம். 2003-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ‘ஸ்ஷா’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான தனிஷா, 2005-ம் ஆண்டு அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் நடித்த ‘சர்கார்’ இந்திப் படத்தில் நடித்தார்.‘உன்னாலே உன்னாலே’ படத்தில் க்யூட் தீபிகாவாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் தனிஷா முகர்ஜி இப்போது அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தி பிக்பாஸ் 7 உள்ளிட்ட பல ரியாலிடி ஷோக்களிலும் கலந்துகொண்டுள்ள தனிஷா 47 வயதிலும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல், சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.
