Connect with us

பொழுதுபோக்கு

எனக்கு ஆசையா இருக்கு, ஒரு தடவை பாத்துக்கிறேனே; பிரபல நடிகையை பார்க்க அப்பாவிடேமே கேட்ட சூர்யா சேதுபதி!

Published

on

surya se

Loading

எனக்கு ஆசையா இருக்கு, ஒரு தடவை பாத்துக்கிறேனே; பிரபல நடிகையை பார்க்க அப்பாவிடேமே கேட்ட சூர்யா சேதுபதி!

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் விஜய் சேதுபதி. இவர் கதாநாயகன் முதல் வில்லன் கதாபாத்திரம் வரை அனைத்து கேரக்டர்களிலும் நடித்து அசத்துவார். ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ போன்ற படங்களில் இவரின் வில்லன் கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது பல படங்களில் பிசியா நடித்து வருகிறார்.விஜய் சேதுபதியை போன்று அவர் மகன் சூர்யா சேதுபதியும் நடிகராக அறிமுகமாகியுள்ளார். தனது தந்தை விஜய் சேதுபதியின் அடையாளத்துடன் திரைத்துறையில் நுழைந்த இவர் இயக்குநர் அனல் அரசு தயாரித்து இயக்கிய ‘ஃபீனிக்ஸ்’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்த படத்தில்  நடிகை வரலட்சுமி, தேவதர்ஷினி, சம்பத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதற்கு ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக சாம் சி.எஸ், எடிட்டராக ப்ரவீன் கே.எல் ஆகியோர் பணிப்புரிந்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸின் போது சூர்யா சேதுபதியின் சில செயல்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. விஜய் சேதுபதி போன்று அவர் மகன் தன்மையாக நடந்துகொள்வதில்லையே என்று பலரும் விமர்சனம் செய்தனர். தொடர்ந்து, ‘ஃபீனிக்ஸ்’ படத்தின் ப்ரீமியர் காட்சியின் போது நடிகர் விஜய் சேதுபதியிடம் மகனின் வீடியோக்களை சமூக வலைதளத்தில் இருந்து நீக்க சொன்னதாக செய்திகள் பரவி வருகிறது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,தெரியாமல் நடந்திருக்கும். வேறு யாராவது செய்திருப்பார்கள் மன்னித்துவிடுங்கள் என்றார். இப்படி பல சர்ச்சைகளை தாண்டி வெளியான ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.இந்நிலையில், பிரபல நடிகையை பார்க்க அப்பாவிடம் கேட்டுள்ளார் சூர்யா சேதுபதி. இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் அவர் பேசியதாவது, ”நாங்கள் எப்போதும் சமந்தா ரசிகர்கள் தான். ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் என் அப்பா விஜய் சேதுபதி நடித்துக் கொண்டிருக்கும் போது நான் அடிக்கடி கேட்பேன் நடிகை சமந்தாவை பார்க்க வேண்டும். எப்போது வரவேண்டும் என்று சொல்லுங்கள் வருகிறேன் என்றேன். அதன்பிறகு படப்பிடிப்பு தளத்தில் சென்று நடிகை சமந்தாவை பார்த்தேன். என் அப்பா நடித்த படத்தில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும்’, ‘விக்ரம் வேதா’, ‘நானும் ரவுடி தான்’, ’96’, ‘சேதுபதி’ போன்ற படங்கள் நான் எப்போதும் பார்க்கும் படங்கள்” என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன