பொழுதுபோக்கு
சன் பிக்சர்ஸ் தயாரித்த படம் நேரடியாக ஓ.டி.டி-யில் ரிலீஸ்: வாரக் கடைசியில் ரெடியா இருங்க மக்களே!
சன் பிக்சர்ஸ் தயாரித்த படம் நேரடியாக ஓ.டி.டி-யில் ரிலீஸ்: வாரக் கடைசியில் ரெடியா இருங்க மக்களே!
குட்டி புலி, கொடிவீரன், கொம்பன், காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம், விருமன் உள்ளிட்ட கிராம பின்னணியில் உருவான படங்களை இயக்கியவர் இயக்குநர் முத்தையா. இவரது இயக்கத்தில் முன்னணி நடிகரான அருள்நிதி நடித்துள்ள படம் ‘ராம்போ’. இப்படம் முழுக்க முழுக்க குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.இந்தப் படத்தில் நடிகை தான்யா ரவிச்சந்திரன், வி.டி.வி கணேஷ், அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் முழுக்க சென்னையிலேயே படமாக்கி முடிக்கப்பட்ட நிலையில், படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ராம்போ படம் நேரடியாக ஓ.டி.டி-யில் வெளியாக உள்ளது. இப்படம் குறைந்த முதலீட்டில் ஒரே கட்டமாக படமாக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான ராம்போ படத்தினை நேரடியாக ஓ.டி.டி வெளியீடாக முடிவு செய்திருக்கிறார்கள். The gloves are on, the fight is real!Arulnithi arrives in a never-before-seen avatar with RAMBO.Premieres Oct 10 | Only on SunNXTThe trailer punch lands tomorrow!Don’t miss the knockout!#RamboOnSunNXT#SunNXTExclusive#TamilMoviePremiere#FightForTruth#Arulnithi… pic.twitter.com/eClhSxMgIAஅதன்படி, அக்டோபர் 10 ஆம் தேதி படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படம் நேரடியாக சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. முன்னதாக, முத்தையா இயக்கி, விக்ரம் பிரபு நடித்த புலிக்குத்தி பாண்டி படம் நேரடியாக சன் டி.வி-யில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
