Connect with us

இலங்கை

திருப்பதி ஆலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; இமெயில் ஆல் பரபரப்பு

Published

on

Loading

திருப்பதி ஆலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; இமெயில் ஆல் பரபரப்பு

  உலகபிரசித்தி பெற்ற திருப்பதி ஆலயத்திற்கு திருவள்ளூர் போராளிகள் பெயரில், திருப்பதிக்கு இமெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் முதல்வர் வீடு, ரயில்வே ஸ்டேஷன் உள்ள முக்கிய இடங்களில் பொலிஸார் சோதனை நடத்தியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

திருப்பதி பொலிஸார் , தேவஸ்தான அதிகாரிகள், ஆந்திர டிஜிபிக்கு நேற்றியதினம் (2) சந்தேகத்திற்கிடமான இமெயில் வந்தது.

Advertisement

அதில் தமிழ்நாட்டின் திருவள்ளூரில் உள்ள ஐ.எஸ்.ஐ மற்றும் முன்னாள் எல்.டி.டி.இ. போராளிகளுடன் சேர்ந்து திருப்பதியில் நான்கு பகுதிகளில் ஆர்.டி.எக்ஸ். வெடிபொருட்கள் வெடிக்கப்பட உள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் நேற்று, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த ஊரான திருப்பதி அடுத்த நாராவாரிப்பள்ளியில் உள்ள முதல்வர் வீடு, திருப்பதியில் உள்ள ஆர்.டி.சி. பேருந்து நிலையம்,

ஸ்ரீனிவாசம், விஷ்ணு நிவாசம் பக்தர்கள் ஓய்வறை, கபில தீர்த்தம் கோயில் மற்றும் கோவிந்தராஜா சுவாமி கோயில், ரயில்வே ஸ்டேஷன் ஆகிய பகுதிகளில் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் கொண்டு சோதனை மேற்கொண்டர்.

Advertisement

அத்துடன் நீதிபதிகள் குடியிருப்பு வளாகம் மற்றும் நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டன.

இந்நிலையில், வரும் 6ம் திகதி முதல்வர் சந்திரபாபு திருப்பதி வர உள்ள நிலையில், வேளாண் கல்லூரி ஹெலிபேடிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.

மேலும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், ஸ்ரீகாளஹஸ்தி கோயில்களிலும் வெடிகுண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

எனினும் எந்தவித வெடிகுண்டும் கிடைக்கவில்லை என்று, தொடர் கண்காணிப்பில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன