சினிமா
KPY பாலாட இது தான் எனக்கு பிடிக்கவே பிடிக்காது .! நெருப்பாய் பேசிய பிளாக் பாண்டி
KPY பாலாட இது தான் எனக்கு பிடிக்கவே பிடிக்காது .! நெருப்பாய் பேசிய பிளாக் பாண்டி
சின்னத்திரையில் ஒளிபரப்பான கனா காணும் காலங்களில் நடித்து பிரபலமானவர் பிளாக் பாண்டி. அதன் பின்பு 2010 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த அங்காடி தெரு படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இவர் பல நற் பணிகளையும் செய்து வருகின்றார். உதவும் மனிதம் என்ற அமைப்பை உருவாக்கி கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாகவும் கஷ்டப்பட்ட பலருக்கு சத்தம் இல்லாமல் உதவி செய்து வருகின்றார். சமீப காலமாகவே இவருடைய உதவிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.இந்த நிலையில், பிளாக் பாண்டி கொடுத்த பேட்டி ஒன்றில் KPY பாலா பற்றி மனம் திறந்து பேசி உள்ளார் . அதன்படி அதில் அவர் கூறுகையில், பாலா சின்ன வயசிலிருந்தே கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்திருக்கான். ஆனால் அவன் கிட்ட எனக்கு ஒரு விஷயம் தான் பிடிக்கவில்லை. அதை நான் ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன். அது என்னவென்றால் பாலா தனியாகத்தான் பலருக்கும் உதவி செய்கின்றார் என்று சொல்லுகின்றான். ஆனால் ஒரு முறை ராகவா லாரன்ஸும் உன்னுடன் உதவி செய்கின்றார் தானே.. அதை ஏன் சொல்லவில்லை என்று கேட்டேன்.. அதற்கு பிறகு தான் அதை பற்றி யோசித்ததாகவும் அவன் சொல்லுகின்றான்.. மேலும் நீ பலருக்கு பல உதவிகளை செய்றா.. ஒரு அமைப்பை உருவாக்கினால்அதில் பல கோடிஸ்வரர்களும் தங்களால் முடிந்தவற்றை செய்வார்கள் தானே என்று கூறினேன். அதற்கு அவன் வேண்டாம் என்று மறுத்துவிட்டான்.அதே நேரத்தில் பிறர் மூலம் பாலாவுக்கு கிடைக்கும் உதவிகளையும் பாலா சொல்ல வேண்டும். ஆனால் அவன் சொல்லுவதில்லை. இதுதான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனாலும் நீ செய்டா தம்பி.. நான் உன் கூடத்தான் இருப்பேன்.. உன் கூட இருக்கிறவங்களையும் வச்சு நல்லது செய்…. நாம நல்லது தானே பண்ணப் போகின்றோம்.. நீ ஜெயிக்க வேண்டும்.. ரஜினி போல், கமல் போல், அஜித், விஜய் போல் பெரிய ஆளாய் வர வேண்டும். மக்களுக்கு நல்லது செய்வார்கள் ஒரு சிலர் தான்.. அதனால் நீ ஜெயிக்க வேண்டும் என்று பிளாக் பாண்டி தெரிவித்துள்ளார்
