Connect with us

விளையாட்டு

IND W vs PAK W LIVE Score: வெற்றிப் பயணத்தை தொடருமா இந்தியா? பாகிஸ்தானுடன் இன்று மோதல்

Published

on

India W vs Pakistan W Live Score Updates, Women’s ICC World Cup

Loading

IND W vs PAK W LIVE Score: வெற்றிப் பயணத்தை தொடருமா இந்தியா? பாகிஸ்தானுடன் இன்று மோதல்

IND W vs PAK W World Cup 2025, India Women vs Pakistan Women Live Score Updates Today: 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.இந்நிலையில், இந்தத் தொடரில் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 6-வது லீக் ஆட்டத்தில் பரம போட்டியாளர்களான இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் 59 ரன் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது. அதே உத்வேகத்தில் இன்றைய போட்டியில் களமிறங்கும். மறுபுறம், பாத்திமா சனா தலைமையிலான பாகிஸ்தான் தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாத்தில் வங்கதேசத்திடம் படுதோல்வி அடைந்தது. 129 ரன்னில் சுருண்ட பாகிஸ்தான் தவறுகளை களைந்து சரிவில் இருந்து மீண்டு வர முயற்சிக்கும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன