தொழில்நுட்பம்
Vivo v60e Launch 2025: 200MP கேமரா, 6,500mAh பேட்டரி… விவோ V60e இந்தியாவில் அதிரடி அறிமுகம்!
Vivo v60e Launch 2025: 200MP கேமரா, 6,500mAh பேட்டரி… விவோ V60e இந்தியாவில் அதிரடி அறிமுகம்!
Vivo v60e launched in India: விவோ நிறுவனம் தனது V-சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரிவாக்கம் செய்து, புதிய விவோ V60e மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் AMOLED டிஸ்ப்ளே மற்றும் மீடியா டெக் (MediaTek) பிராசஸர் உள்ளிட்ட அம்சங்களுடன் வந்துள்ளது. இதில் 200MP மெயின் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனுக்கு சக்தி அளிக்க 6,500 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் 3 ஆண்டுகள் OS அப்டேட் மற்றும் 5 ஆண்டுகள் பாதுகாப்பு (Security) அப்டேட்களைப் பெறும் என விவோ உறுதியளித்துள்ளது.வரவிருக்கும் பண்டிகை காலத்தைக் குறிப்பிட்டு விவோ நிறுவனம், “பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், அன்பு, நினைவுகள் மற்றும் தனித்துவமான ஸ்டைலை கொண்டாட V60e சரியான தேர்வாக அமையும். வாழ்க்கையின் தருணங்களை படம்பிடிப்பது மட்டுமல்லாமல், அதை மீண்டும் நினைவு கூரவும் V60e வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.Elite Purple (எலைட் பர்பிள்) மற்றும் Noble Gold (நோபல் கோல்ட்) ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. இன்று முதல் விவோவின் பிரத்யேக ஸ்டோர் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆன்லைன் ஆஃபர்ஸ்HDFC, ICICI, Axis Bank (Amazon-இல்) மற்றும் SBI உள்ளிட்ட குறிப்பிட்ட வங்கிகளின் கார்டுகளில் 10% உடனடி வங்கித் தள்ளுபடி அல்லது 10% வரை எக்ஸ்சேஞ் போனஸ் (Exchange Bonus), 6 மாதங்கள் வரை வட்டி இல்லாத இ.எம்.ஐ. வசதி, 1 வருடம் இலவச நீட்டிக்கப்பட்ட வாரண்டி (Extended Warranty). விவோ டி.டபிள்யூ 3e இயர்பட்ஸ் சலுகை விலையில் ரூ.1,499-க்கு வாங்கலாம்.ஆஃப்லைன் ஆஃபர்ஸ்:1 வருடம் இலவச நீட்டிக்கப்பட்ட வாரண்டியுடன் 10% வரை கேஷ்பேக் அல்லது 12 மாதங்கள் ஜீரோ டவுன் பேமெண்ட் அல்லது 10% வரை பரிமாற்ற போனஸ். V60e வாங்கும் போது V Shield Screen Damaged protection மற்றும் நீட்டிக்கப்பட்ட வாரண்டி ரூ.349-க்கு வாங்கலாம், அத்துடன் விவோ TWS 3e இயர்பட்ஸ் ரூ.1,499-க்கு கிடைக்கும். 12 மாதங்களில் 60% உறுதி அளிக்கப்பட்ட பைபேக் (assured buyback), ரூ.1,199 ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்துடன் 6 மாதங்களுக்கு 10 ஓடிடி ஆப்களுக்கு இலவச பிரீமியம் அணுகல். இந்தச் சலுகைகள் SBI, DBS, HDFC, American Express, Kotak, IDFC, Yes Bank, Bobcard, மற்றும் AU Small Finance Bank உள்ளிட்ட வங்கிகளின் கார்டுகளுக்கு பொருந்தும்.போனின் சிறப்பம்சங்கள்:6.77-இன்ச் FHD+ குவாட் கர்வ்டு AMOLED டிஸ்ப்ளே (2392 × 1080 பிக்சல்கள்), 120Hz ரெப்ரெஷ் டேட் (Refresh Rate), 1900 நிட்ஸ் உச்ச பிரகாசம் (Peak Brightness), டையம்ண்ட் சீல்டு கிளாஸ் பாதுகாப்பு, 8GB அல்லது 12GB LPDDR4X RAM உடன் 128GB அல்லது 256GB UFS 2.2 சேமிப்பு அம்சங்களில் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 உடன் Funtouch OS 15 உள்ள இயங்குதளத்தில் இயங்கும் இந்தப் போனில், 200MP மெயின் கேமரா (OIS உடன்), 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் (Aura Light உடன்). 4K வீடியோ ரெக்கார்டிங் ஆதரவு உள்ளது. 50MP கண் ஆட்டோஃபோகஸ் (eye autofocus) கேமரா உள்ளது. ஐபி68 மற்றும் ஐபி69 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு சான்றிதழ் உள்ளது. 6,500mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு. டூயல் நானோ சிம் (Dual Nano SIM) வசதி உள்ளது. இந்த புதிய விவோ V60e ஸ்மார்ட்போன், மேம்பட்ட கேமரா மற்றும் நீண்ட பேட்டரி ஆயுளைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
