Connect with us

வணிகம்

பில் இல்லைன்னா சிக்கல்? இந்திய சட்டப்படி நீங்க வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?

Published

on

Pledged Gold Business

Loading

பில் இல்லைன்னா சிக்கல்? இந்திய சட்டப்படி நீங்க வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?

இந்திய கலாசாரத்திலும், பொருளாதாரத்திலும் தங்கம் ஒரு விலைமதிப்பற்ற இடத்தைப் பிடித்துள்ளது. வெறும் அழகுக்கான ஆபரணம் மட்டுமல்லாமல், இது ஒரு பாதுகாப்பான முதலீடாகவும் கருதப்படுகிறது. ஆனால், வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருப்பது சட்டப்பூர்வமானது? வருமான வரித்துறையின் விதிகள் என்னென்ன? இதைத் தெரிந்துகொள்வது சட்டச் சிக்கல்களைத் தவிர்க்க உதவும். தங்கத்தின் இருப்பு வரம்பு என்ன? உங்களிடம் இருக்கும் தங்கத்தை வாங்குவதற்குரிய வருமான ஆதாரத்தை (Income Source) வரி அதிகாரிகளிடம் நிரூபிக்க முடிந்தால், நீங்கள் எவ்வளவு தங்கம் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். தங்க நகைகள், நாணயங்கள், கட்டிகள் என எந்த வடிவில் இருந்தாலும், ஆதாரத்துடன் இருந்தால் வரம்பு இல்லை.ஆகியவற்றின் மூலம் வாங்கப்பட்ட தங்கத்திற்கு வரி கிடையாது.ஆதாரம் இல்லையெனில் எவ்வளவு தங்கம் வைக்கலாம்?நீங்கள் வாங்கிய தங்கத்திற்கு வருமான ஆதாரம் காட்ட முடியாவிட்டால் கூட, சில வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த வரம்புகளுக்குள் இருக்கும் தங்கத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்ய முடியாது:இந்த வரம்புகளைத் தாண்டி தங்கம் இருந்தால், அதன் மூலத்தை நிரூபிக்க வேண்டியது அவசியம்.தங்கத்தின் பிற வடிவங்களும் வரிகளும்!தற்போது டிஜிட்டல் வடிவிலும் தங்கம் வாங்கப்படுவதால், அதற்கான வரம்புகளைத் தெரிந்துகொள்வதும் அவசியம்:டிஜிட்டல் தங்கம் (Digital Gold): டிஜிட்டல் தங்கத்தை நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கலாம், விற்கலாம். இதற்கு சட்டப்பூர்வ வரம்பு இல்லை. ஆனால், ஒரு நாளைக்கு ₹2 லட்சம் வரையே பரிவர்த்தனை செய்ய முடியும். மூன்று ஆண்டுகளுக்கு மேல் வைத்திருந்தால் 20% நீண்ட கால மூலதன ஆதாய வரி (LTCG) உண்டு.சவரன் தங்கப் பத்திரங்கள் (SGB): ஒரு நிதியாண்டில் ஒரு நபரால் அதிகபட்சமாக 4 கிலோ சவரன் தங்கப் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்ய முடியும். இந்த முதலீட்டிற்கு ஜி.எஸ்.டி. கிடையாது. எட்டு ஆண்டுகள் முதிர்வு காலம் முடிந்தபின் கிடைக்கும் லாபத்திற்கு வரி கிடையாது.தங்கம் மீதான வரிகள் (GST & Income Tax)ஜிஎஸ்டி வரி (GST): தங்கத்தின் மீது 3% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஆபரணங்களின் செய்கூலிக்கு 5% ஜிஎஸ்டி உண்டு. பழைய தங்கத்தை கொடுத்து புதிய நகைகள் வாங்கும்போது, கூடுதல் எடைக்கு மட்டுமே ஜிஎஸ்டி விதிக்கப்படும்.பரிசுகளுக்கான வருமான வரி: உறவினர்களிடம் இருந்து பெறும் பரிசுத் தங்கத்திற்கு (நகைகள், கட்டிகள், பாண்டுகள்) வரி விலக்கு உண்டு. ஆனால், மற்றவர்களிடம் இருந்து ஒரு வருடத்தில் ₹50,000/-க்கு மேல் மதிப்புள்ள தங்கம் பரிசாகக் கிடைத்தால், அதற்கு வருமான வரி உண்டு. திருமணம் போன்ற விசேஷங்களில் பெறும் பரிசுகளுக்கு வரி விலக்கு உண்டு.தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்றாலும், அதன் வாங்குதல் மற்றும் விற்பனை குறித்த தெளிவான ஆவணங்களைப் பராமரிப்பது, சட்ட சிக்கல்களில் இருந்து உங்களைக் காத்துக்கொள்ள மிக அவசியம்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன