வணிகம்
ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை: சவரன் ரூ. 90,000 ஐ தாண்டி வரலாற்று சாதனை
ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை: சவரன் ரூ. 90,000 ஐ தாண்டி வரலாற்று சாதனை
சர்வதேசப் பொருளாதாரச் சூழல் மற்றும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக, தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்குத் தொடர்ந்து உயர்ந்து, நடுத்தர வர்க்கத்தினரைக் கலக்கமடையச் செய்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட சரிவு, அமெரிக்காவில் இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதிப்பு, அத்துடன் உக்ரைன் – ரஷ்யா போர் மற்றும் இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் போன்ற சர்வதேசப் பதற்றங்கள் ஆகியவை தங்கத்தில் முதலீட்டை அதிகரித்துள்ளதால், அதன் விலை மின்னல் வேகத்தில் ஏறி வருகிறது.நேற்று ₹89,600… இன்று ₹90,400!சமயங்களில் நாளொன்றுக்கு இருமுறை கூடத் தங்கம் விலை உயர்ந்துவரும் நிலையில், நேற்று (அக். 7) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ₹600 உயர்ந்து, ஒரு பவுன் ₹89,600-க்கு விற்பனையானது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கம் ₹11,200-க்கு விற்கப்பட்டது.இந்நிலையில், இன்று (அக்டோபர் 8) தங்கத்தின் விலை மேலும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹800 உயர்ந்து, ஒரு சவரன் ₹90,400 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதேபோல், ஒரு கிராம் ₹100 உயர்ந்து, ₹11,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி நிலவரம்தங்கத்தின் விலை பவுனுக்கு ₹90,000 ஐத் தாண்டிச் சென்றபோதும், வெள்ளியின் விலை மட்டும் எவ்வித மாற்றமும் இன்றி சற்றே ஆறுதல் அளிக்கிறது. இன்றும் ஒரு கிராம் வெள்ளி ₹167-க்கும், ஒரு கிலோ ₹1,67,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தொடர்ச்சியான இந்த விலை உயர்வு, திருமணங்கள் மற்றும் சுபநிகழ்ச்சிகளுக்காகத் தங்கம் வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
