தொழில்நுட்பம்
வாட்ஸ்அப்-ல் வந்த புது ‘சீக்ரெட்’ செட்டிங்… ஸ்டேட்டஸ் ஷேரிங் இனிமே ஒரே கிளிக் போதும்!
வாட்ஸ்அப்-ல் வந்த புது ‘சீக்ரெட்’ செட்டிங்… ஸ்டேட்டஸ் ஷேரிங் இனிமே ஒரே கிளிக் போதும்!
பல்லாயிரக்கணக்கான இந்திய பயனர்களால் பயன்படுத்தப்படும் உலகின் பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்அப், தனது இந்திய பயனர்களுக்காக புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுதான் ‘Share Status with Contacts’ செட்டிங்.இதுவரை பயனர்கள் தங்கள் ஸ்டேட்டஸ் போடும்போது, பார்வையாளர்களை (Audience) ஒவ்வொரு முறையும் கஸ்டமைஸ் செய்ய வேண்டி இருந்தது. ஆனால், இந்த புதிய அம்சத்தின் மூலம், உங்க ஸ்டேட்டஸை உங்க முழு காண்டாக்ட் லிஸ்ட்டுடன் (My Contacts) எளிதாகப் பகிர இதை இயல்புநிலை (Default) செட்டிங்காக மாற்றிக் கொள்ளலாம். வாட்ஸ்அப்பின் இந்த முன்னெடுப்பின் முக்கிய நோக்கம், உங்க ஸ்டேட்டஸ் யாருக்கு காட்டப்பட வேண்டும் என்பதில் பயனர்களுக்கு அதிகக் கட்டுப்பாட்டையும் (Control) எளிமையையும் வழங்குவதுதான்.இந்த புதிய அம்சம் பயனர்களுக்குப் பல வழிகளில் உதவியாக இருக்கிறது. நீங்க மீண்டும் மீண்டும் செட்டிங்ஸை மாற்றாமல், உங்க ஸ்டேட்டஸ் அப்டேட்களைப் பார்ப்பவர்களின் வட்டத்தை எளிதாகக் கட்டுப்படுத்தலாம். இயல்புநிலையாக ‘My Contacts’ ஆப்ஷனைத் தேர்ந்தெடுப்பதால், ஒவ்வொரு முறையும் கிளிக் செய்யும் வேலை குறைகிறது. இதன் மூலம் ஸ்டோரீஸ்களைப் பகிர்வது மேலும் எளிமையாகிறது.வாட்ஸ்அப் மேலும் சில கூடுதல் அம்சங்களையும் சோதனை செய்து வருகிறது. இன்ஸ்டாகிராமில் இருப்பது போலவே, நம்பகமான ஒரு சில நண்பர்களுக்கு மட்டுமே ஸ்டேட்டஸ் போடுவதற்கான ‘Close Friends’ ஆப்ஷனையும், உங்கள் ஸ்டேட்டஸை யார் மீண்டும் பகிர (Reshare) முடியும் என்பதைக் கட்டுப்படுத்தும் அம்சத்தையும் விரைவில் கொண்டு வரவுள்ளது.புதிய அம்சத்தைப் பயன்படுத்துவது எப்படி?இந்த புதிய அம்சத்தைப் பயன்படுத்துவது மிகவும் எளிது. உங்க வாட்ஸ்அப்பைத் திறந்து, ‘Status’ பகுதிக்குச் செல்லவும். வழக்கம்போல புகைப் படம், வீடியோ அல்லது டெக்ஸ்ட் ஸ்டேட்டஸை உருவாக்கவும். நீங்க அனுப்பும் முன், திரையில் “Status (Contacts)” அல்லது “My contacts / Contacts except … / Only share with …” போன்ற விருப்பங்களைப் பார்ப்பீர்கள். அதில், உங்கள் அனைத்து நண்பர்களுக்கும் ஸ்டேட்டஸைப் பகிர “My Contacts” என்பதைத் தேர்வு செய்யவும். குறிப்பிட்டவர்களைத் தவிர்த்துவிட்டுப் பகிர விரும்பினால் அதற்கான ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கலாம். இந்தத் தேர்வுக்குப் பிறகு, உங்கள் ஸ்டேட்டஸை அனுப்பினால், நீங்கள் தேர்ந்தெடுத்த பார்வையாளர்களுக்கு மட்டுமே அது காட்டப்படும்.வரவிருக்கும் மற்ற சுவாரஸ்யமான அம்சங்கள்ஸ்டேட்டஸ் செட்டிங்குகளைத் தவிர்த்து, வாட்ஸ்அப் வேறு சில சுவாரஸ்யமான அம்சங்களையும் களமிறக்க உள்ளது. ஐ.ஓ.எஸ் பயனர்கள் Live Photos மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்கள் Motion Photos-ஐ ஸ்டேட்டஸ் மற்றும் சாட்களில் பகிரலாம். சாட்களில் இருந்து வெளியேறாமல் மெசேஜ்களை மொழிபெயர்க்கும் (Message Translation) வசதி. குரூப் சாட்களில் மெசேஜ்களுக்குப் பதிலளிக்கும் Threaded replies மற்றும் வீடியோ நோட்ஸ் (Video Notes) அனுப்பும் வசதி.இந்த அம்சங்கள் அனைத்தும் படிப்படியாக வெளியிடப்படுவதால், சில பயனர்களுக்கு உடனடியாகக் கிடைக்காமல் போகலாம். எனவே, பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப்பை அடிக்கடி அப்டேட் செய்வது புதிய அம்சங்களைப் பெற உதவும்.
