Connect with us

வணிகம்

இதை மட்டும் செய்யாவிட்டால் ரேஷன் கார்டில் பெயர் நீக்கம்: வெளியூரில் வசிக்கும் மக்கள் இதை அவசியம் நோட் பண்ணுங்க!

Published

on

Ration card 3

Loading

இதை மட்டும் செய்யாவிட்டால் ரேஷன் கார்டில் பெயர் நீக்கம்: வெளியூரில் வசிக்கும் மக்கள் இதை அவசியம் நோட் பண்ணுங்க!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் எல்லோரும் உடனடியாக அதைப் புதுப்பிக்க வேண்டும். நீங்கள் ஏற்கெனவே ஆதார் அட்டையை ரேஷன் அட்டையுடன் இணைக்கவில்லை என்றால், முதலில் அதை இணைக்க வேண்டும். அதற்கு பிறகு, அருகில் இருக்கும் ரேஷன் கடைக்குச் என்று கைரேகை வைத்து அப்டேட் செய்துகொள்ள வேண்டும்.ரேஷன் அட்டை அப்டேட் குறித்து காமன் மேன் யூடிடியூப் சேனலில் ஒரு முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளனர். அதாவது, தமிழ்நாடு அரசு ரேஷன் அட்டை மற்றும் ரேஷன் பொருட்களை வழங்குவதில் முக்கியமான நடைமுறைகளைக் கொண்டுவந்துள்ளது. ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் தொடர்ந்து ரேஷன் பொருட்களை வாங்குகிறார்களா? அவர்கள் தொடர்ந்து, அதே பகுதியில் இருக்கிறார்களா? அல்லது வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடு சென்றுவிட்டார்களா என்பதைக் கவனித்து அவர்களின் பெயரை ரேஷன் அட்டையில் இருந்து நீக்குகிறது. அதனால், ரேஷன் அட்டையை புதுப்பிப்பது அவசியம். ரேஷன் அட்டையைப் புதுப்பிக்காவிட்டாலோ அல்லது ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்காவிட்டாலோ ரேஷன் அட்டையில் இருந்து அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுவிடும். அதனால், உங்கள் ரேஷன் அட்டையை உடனே புதுப்பிக்க வேண்டும். அப்படி ரேஷன் அட்டையைப் புதுப்பிக்கும்போது, இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். முதலில் உங்கள் டி.எஸ்.ஓ அலுவலகத்துக்கு சென்று உங்கள் ரேஷன் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். பின்னர், அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று உங்கள் ரேஷன் அட்டைக்கான கைரேகையைப் பதிவு செய்யுங்கள்.அதே போல, 5 வயதான அனைத்து குழந்தைகளின் பெயர்களையும் ரேஷன் அட்டையில் சேர்க்க வேண்டும். குழந்தைகள் என்பதால் அவர்களின் கைரேகைப் பதிய வேண்டியதில்லை. பெரியவர்கள் ரேஷன் அட்டையில் உங்கள் பெயர் இருக்கிறதா என்று சரி பார்க்க வேண்டும். அதற்கு, டி.என்.பி.டி.எஸ் செயலியில் சென்று உங்கள் ரேஷன் அட்டை எண்ணைக் கிளிக் செய்து, ரேஷன் அட்டையில் உங்கள் பெயர் இருக்கிறதா என்று பாருங்கள். அடுத்து, உங்கள் பெயருடன் ஆதார் அட்டையை இணைக்க டி.எஸ்.ஓ அலுவலகத்துக்கு சென்று ரேஷன் அட்டை – ஆதார் எண்ணை இணையுங்கள். அதோடு விட்டுவிடாதீர்கள். உங்க வீட்டுக்கு அருகில் இருக்கும் ரேஷன் கடைக்கு சென்று பொறுப்பாளரிடம் உங்கள் கைரேகையைப் பதிவு செய்யுங்கள். இப்படி செய்தால்தான், உங்களுடைய ரேஷன் அட்டையில் உங்களுடைய பெயர் இருக்கும். இல்லாவிட்டால், உங்கள் பெயரை ரேஷன் அட்டையில் இருந்து நீக்கிவிடுவார்கள். அதனால், உடனடியாக், தமிழ்நாட்டில் 5 வயதான குழந்தைகளை கட்டாயம் ரேஷன் அட்டையில் பெயர் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் ரேஷன் அட்டையில் இருந்து உங்கள் பெயர் நீக்கப்படும். குறிப்பாக வெளியூரில் வசிக்கும் மக்கள் மறக்காமல் இதை அவசியம் செய்யுங்கள்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன