வணிகம்
கனடாவில் நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஜாக்பாட்: வெளிநாட்டுக் குடும்ப உறுப்பினர்களும் இனி ‘ஓபன் ஒர்க் பெர்மிட்’ பெறலாம்
கனடாவில் நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஜாக்பாட்: வெளிநாட்டுக் குடும்ப உறுப்பினர்களும் இனி ‘ஓபன் ஒர்க் பெர்மிட்’ பெறலாம்
கனடாவில் நிரந்தரக் குடியுரிமை (Permanent Resident – PR) பெற விண்ணப்பித்துள்ள உலகெங்கிலும் உள்ள தற்காலிக வதிவிடதாரர்கள் (Temporary Residents) தற்போது பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். காத்திருப்புப் பட்டியலில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கானவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, கனடா அரசு மிக முக்கியமான ஒரு குடியேற்றச் சலுகையை அறிவித்துள்ளது.’தற்காலிக வதிவிடத்தில் இருந்து நிரந்தரக் குடியுரிமைக்கு’ (TR to PR Pathway) மாறும் பாதையில் விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கப்படும் திறந்த வேலை அனுமதிப் பத்திரத்தின் (Open Work Permit) காலக்கெடுவை 2026, டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது கனடா அரசு. இது மட்டும் அல்லாமல், மிக முக்கியமான ஒரு விதி தளர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் முக்கியப் பலன்கள்:வேலைக்குத் தடை இல்லை: 2021-ல் நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பித்து, இன்னும் முடிவுக்காகக் காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள், தங்கள் விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கும் வரை, எந்தவித இடையூறும் இன்றி, கனடாவில் எந்தத் துறையிலும், எந்த நிறுவனத்திலும் தொடர்ந்து பணியாற்றலாம்.புதுப்பித்தல் சிக்கல் தீர்ந்தது: இந்த நீண்ட கால நீட்டிப்பு, வேலை அனுமதிப் பத்திரத்தை அடிக்கடி புதுப்பிக்க (renewal) வேண்டிய தேவையைத் தவிர்த்து, விண்ணப்பதாரர்களுக்கு அதிக ஸ்திரத்தன்மையை வழங்குகிறது.குடும்பங்களை இணைக்கும் கனடாவின் புதிய முடிவு!இந்த அறிவிப்பின் மூலம் கனடா அரசு மேலும் ஒரு பெரிய சலுகையை வழங்கியுள்ளது. திறந்த வேலை அனுமதிப் பத்திரத்தின் தகுதிகள் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளன.சிறப்புச் சலுகை: இனி, முதன்மை விண்ணப்பதாரரின் வெளிநாட்டில் வசிக்கும் தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்களும் (Eligible Family Members Abroad) இந்தத் திறந்த வேலை அனுமதிப் பத்திரத்தைப் பெற முடியும்.நிரந்தரக் குடியுரிமை (PR) விண்ணப்பதாரரின் மனைவி/கணவர் மற்றும் குழந்தைகள் விரைவில் கனடாவிற்கு வந்து, நிரந்தரக் குடியுரிமை முடிவு வரும் வரை நாட்டில் தடையின்றி வேலை செய்வதை இந்த விதி உறுதி செய்கிறது. குடும்பங்கள் கனடாவில் ஒன்று சேர்வதை விரைவுபடுத்துவதே இந்த முடிவின் முக்கிய நோக்கம் என்று கனடா அரசு தெரிவித்துள்ளது.இந்தியர்கள் உட்பட, கனடாவில் தங்கள் எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளக் காத்திருக்கும் தற்காலிக வதிவிடதாரர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும், கனடா அரசு அறிவித்துள்ள இந்த நீட்டிப்பு ஒரு மிகப்பெரிய ஆறுதலாகவும், அரிய வாய்ப்பாகவும் கருதப்படுகிறது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
