Connect with us

தொழில்நுட்பம்

சவுண்ட் இனி வேற லெவல்தான்… மியூசிக், மூவி, 3D தேவைக்கேற்ப மாறும் ‘டார்கெட்’ சவுண்ட்பார்!

Published

on

Target TT-SBT-101 Soundbar

Loading

சவுண்ட் இனி வேற லெவல்தான்… மியூசிக், மூவி, 3D தேவைக்கேற்ப மாறும் ‘டார்கெட்’ சவுண்ட்பார்!

உங்க வீட்டில் சினிமா பார்ப்பது, சாங் கேட்பது போன்ற பொழுதுபோக்கு அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தத் தயாரா? இதோ, டார்கெட் பிராண்டின் 90 வாட்ஸ் சக்தி கொண்ட சவுண்ட்பார் பற்றிய முழு விவரம். இது வெறும் சவுண்ட்பார் மட்டுமல்ல; உங்க வீட்டைச் சுற்றியுள்ள ஒலி உலகையே மாற்றியமைக்கக் கூடிய ஒரு கருவி!இந்த டார்கெட் சவுண்ட்பாரின் இதயமே அதன் 90 வாட்ஸ் RMS (Root Mean Square) வெளியீடுதான். இந்தப் பவர், நீங்க பார்க்கும் திரைப்படங்கள், கேட்கும் பாடல்கள் என எல்லாவற்றுக்கும் சக்திவாய்ந்த, காதில் நிறைவான சரவுண்ட் (Surround) ஆடியோவை வழங்குகிறது. இதன் அதிர்வெண் மறுமொழி 20 KHz வரை இருப்பதால், மிகத் துல்லியமான ஒலி அனுபவம் உறுதி செய்யப்படுகிறது.மல்டி கனெக்டிவிட்டி மாயாஜாலம்!இந்த சவுண்ட்பாரின் பெரிய பலமே அதன் பல்வகை இணைப்பு வசதிகள்தான். எந்த ஒரு சாதனத்தையும் எளிதாக இதனுடன் இணைக்கலாம்.புளூடூத்: உங்க ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் என எந்தச் சாதனத்தில் இருந்தும் 10 மீட்டர் (33 அடி) தொலைவு வரை வயர்லெஸ்ஸாகப் பாட்டுகளை ஸ்ட்ரீம் செய்யலாம்.HDMI ARC: இதுதான் செட்டப் மாஸ்டர். ஒற்றை HDMI கேபிளைப் பயன்படுத்தி டிவியுடன் இணைத்து, கேபிள் குழப்பத்தைக் குறைக்கலாம். மேலும், உங்கள் டிவி ரிமோட்டைக் கொண்டே சவுண்ட்பாரின் வால்யூமைக் கட்டுப்படுத்தலாம்!ஆப்டிகல் உள்ளீடு: உங்க நவீன டிவிகளில் இருந்து சிக்னல் தரம் குறையாமல் உயர்தர டிஜிட்டல் ஆடியோவைப் பெற இது உதவுகிறது.Aux & USB: பழைய MP3 பிளேயர்கள் அல்லது 3.5mm ஆடியோ கேபிள் பயன்படுத்தும் சாதனங்களுக்கு Aux உள்ளீடு கைக்கொடுக்கும். USB மூலம் பென் டிரைவ்களில் உள்ள ஆடியோ ஃபைல்களை நேரடியாக இயக்கலாம்.இந்தச் சவுண்ட்பார் வெறும் சத்தத்தை மட்டும் கொடுப்பதில்லை; நீங்கள் விரும்புவதைக் கொடுக்கிறது. இதில் உள்ள ஈக்வலைசர் ப்ரீசெட்கள் மிக பயனுள்ளவை. பாடல்களுக்குத் தேவையான மிருதுவான ஒலி அமைப்பு, ஆழமான பாஸ் மற்றும் திரில்லிங்கான எஃபெக்ட்ஸுடன் கூடிய சினிமா அனுபவம், உரையாடல்கள் தெளிவாகக் கேட்கும்படியான தெளிவான ஒலி, அதிவேக சரவுண்ட் ஒலி அனுபவத்தை அளிக்கும்.ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசானில் ரூ.3,000-க்கு இந்த சவுண்ட் பார் கிடைக்கிறது. சில்லறை விற்பனை கடைகளில் ரூ.2,500-க்கு கூட வாங்க முடியும். உங்க விருப்பமான ப்ரீசெட்டை எளிதாகத் தேர்ந்தெடுக்க, இதில் உள்ள LED டிஸ்ப்ளே மற்றும் தரமான ரிமோட் கண்ட்ரோல் பெரிதும் உதவுகிறது. சினிமா, இசை, விளையாட்டு என உங்க பொழுதுபோக்கிற்கு முழுமையான மற்றும் சக்திவாய்ந்த ஒலியை வழங்க இந்த டார்கெட் சவுண்ட்பார் காத்திருக்கிறது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன