உலகம்
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கும் ட்ரம்ப்!
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கும் ட்ரம்ப்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் முதல் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 100% வரி விதிக்கப் போவதாக கூறியுள்ளார்.
இந்த புதிய வரி தொகுப்பில் முக்கியமான மென்பொருட்களும் அடங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக அரிய மண் தாதுக்களின் ஏற்றுமதிக்கான விதிகளை கடுமையாக்குவதாக சீனா அறிவித்திருந்தது. இதற்கு பதிலடியாகவே ட்ரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சீனா “மிகவும் விரோதமாக” மாறி வருவதாகவும், உலகை “சிறைப்பிடிக்க” முயற்சிப்பதாகவும் ட்ரம்ப் விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
