பொழுதுபோக்கு
ஹீரோவ காக்கா புடிக்காத, நேக்கா படம் எடுக்கணும்; தமிழ் சினிமாவை அடுக்கு மொழியில் கிழித்த டி.ஆர்: லேட்டஸ்ட் வீடியோ!
ஹீரோவ காக்கா புடிக்காத, நேக்கா படம் எடுக்கணும்; தமிழ் சினிமாவை அடுக்கு மொழியில் கிழித்த டி.ஆர்: லேட்டஸ்ட் வீடியோ!
சமீப காலமாக தமிழ் சினிமாவில் பெரிய வெற்றிப்படங்கள் வரவில்லை என்றும், மாறாக கன்னடா, மலையாம் உள்ளிட்ட பிற மொழி திரைப்படங்களில் தமிழகத்தில் வசூலை குவித்து வருவது தமிழ் சினிமா மீதான விமர்னங்களை கடுமையாக எழுப்பியுள்ளது. இது குறித்து நடிகரும் இயக்குனருமான டி.ஆர். தனது பாணியில் விமர்சித்துள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்திற்கு 100 கோடிக்கு மேல் பட்ஜெட் ஒதுக்கினால் அதில் 60 சதவீதத்திற்கு மேல் நடிகர்களின் சம்பளமாக போய்விடுகிறது. மீதமுள்ள 40 சதவீதத்தில் டெக்னீஷியன்கள் சம்பளம் மற்றும் பட தயாரிப்பு செலவாகிறது என்று பிரபலங்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறது. அதேபோல், யூடியூப் விமர்சனங்களால் தான் திரைப்படங்கள் வெற்றியை பெறவில்லை என்றும், கூறி வருகின்றனர். இதன் காரணமாக 3 நாட்களுக்கு விமர்சனம் வர கூடாது என்று தயாரிப்பாளர்கள் தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது.குறிப்பாக சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம், ரிலீஸ்க்கு முன்பாக, ரூ1000 கோடி வசூலாகும், ஆடியோ நிகழ்ச்சிக்கு வந்த டிக்கெட்டை பத்திரமாக வைத்திருங்கள், அது படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சிக்கு உதவும் என்று தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தபோது, பலரும் கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். அதேபோல் முன்னணி நடிகர்களின் படங்கள் வசூலை குவிக்க திணறி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. இங்கிருக்கும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெரிய நடிகர்களின் கால்ஷீட் கிடைத்ததற்காகவே படம் எடுப்பதாக பலரும் கூறுகின்றனர்.சமீபத்தில் வெளியான கமல்ஹாசனின் தக் லைப், ரஜினிகாந்தின் கூலி, அஜித்தின் விடா முயற்சி, குட் பேட் அக்லி, விக்ரமின் வீர தீர சூரன், உள்ளிட்ட பல படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ரசிகர்களை ஏமாற்றிய படங்களாக மாறிவிட்டது. இந்த படங்களின் தோல்விக்கு தியேட்டர் முன்பு, யூடியூப்களில் ரசிகர்கள் கொடுக்கும் விமர்சனங்கள் தான் காரணம் என்று சினிமா வட்டாரத்தில் கூறி வந்த நிலையில், தற்போது சினிமா துறையில் இருந்தே ஒருவர், தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.தமிழ் சினிமாவில் தனக்கு தெரியாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து துறைகளிலும் அச்சாரம் அமைத்து அசத்தியவர் தான் டி.ராஜேந்தர். தற்போது இவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், கன்னட படம் காந்தாரா ஓடுது தாறுமாறா, ஆனால் தமிழ்ப்படம் ஏன் இப்படி ஆகிறது நேர் மாறா? மலையாளப்படம் ஓடுது, கலக்குது லோகா, ஆனால் இங்கு தமிழ் திரையுலகம் ஆவுது வீக்கா, படஉலகம் ஆகுது ஷாக்கா, கேட்ட பட்ஜெட் பத்தலனு சொல்லிட்டு இருக்க கூடாது சாக்கா, படம் எடுக்கிறது என்ன ஒரு ஜோக்கா?இவ்வளவு நாள் ஆடியன்ஸ் தான் Kollywoodஐ அடிச்சுகிட்டு இருந்தாங்க .! இப்போ திரை உலகத்தில் இருந்தே குரல்கள் வெளியே வர ஆரம்பிச்சுட்டு.! pic.twitter.com/Qlew68AnCtகதாநாயகனின் கால்ஷீட்டுக்காக புடிச்சிக்கிட்டு இருந்தா போதாது காக்கா, டெய்லர்னு சொன்ன துணியில் போட தெரியனும் டாக்கா, தயாரிப்பாளர்னு சொன்ன படம் எடுக்க தெரியனும் நேக்கா, மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்கள் ஓடுவதை பார்த்து எனக்கு பொறாமை இல்லை. பக்கத்து வீட்டுக்காரங்க, பளபளப்பா, அடுத்த வீட்டுக்காரங்க அட்டகாசமாக, அண்ட வீட்டுக்காரங்க அமக்களமா, இருப்பதை பார்த்தா எனக்கு ஆனந்தம், அதே நேரத்தில் என் வீடு, என் தமிழ் சினிமா இப்படி இருக்கிறது என்று எனக்கு ஆதங்கம் என்று கூறியுள்ளார்.
