தொழில்நுட்பம்
ஐபோன் ஸ்டோரேஜ் இனி பிரச்னை இல்ல… சான்டிஸ்க்-ன் புதிய மேஜிக் எஸ்.எஸ்.டி. வந்துவிட்டது!
ஐபோன் ஸ்டோரேஜ் இனி பிரச்னை இல்ல… சான்டிஸ்க்-ன் புதிய மேஜிக் எஸ்.எஸ்.டி. வந்துவிட்டது!
புதிய ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலையை பார்த்து குறிப்பாக அதன் 2TB ஸ்டோரேஜுக்காக ரூ.2,29,900 வரை செலவு செய்ய வேண்டுமா என்று யோசிக்கிறீர்களா? கவலை வேண்டாம்! உங்க செலவைக் குறைக்கும் ஸ்மார்ட் தீர்வு வந்துவிட்டது. அதுதான் சான்டிஸ்க் கிரியேட்டர் போன் எஸ்.எஸ்.டி (SanDisk Creator Phone SSD)சான்டிஸ்க் நிறுவனம், கண்டெண்ட் கிரியேட்டர்களுக்காக (Content Creators) பிரத்தியேகமாகப் புதிய ‘கிரியேட்டர் சீரிஸ்’ சேமிப்பக சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அதிவேக SD கார்டு, USB-C ஃபிளாஷ் டிரைவ்கள் என பல இருந்தாலும், இந்த சீரீஸின் ஹீரோ, இந்த கச்சிதமான போன் எஸ்.எஸ்.டிதான்இது கிரேடியன்ட் நீல நிறத்தில் (Gradient Blue) பார்ப்பதற்கு அருமையாக இருக்கிறது. மேலும், இதன் வெளிப்புறத்தில் உள்ள சிலிக்கான் கவசம் இதை ஒரு உறுதியான சாதனமாக மாற்றுகிறது. உங்கள் போனுடன் SSD கீழே விழுந்தாலும், 3 மீட்டர் உயரம் வரை இது தாங்கும் திறன் கொண்டது. இதில் நீர் மற்றும் தூசி எதிர்ப்புக்கான ஐ.பி-65 சான்றிதழ் இருந்தாலும், இதைத் தண்ணீரில் முழுவதுமாக மூழ்க வைக்க முடியாது. ஐபோன் முதல் ஆண்ட்ராய்டு வரை… இந்த எஸ்.எஸ்.டி-யைப் பயன்படுத்துவது மிகவும் எளிமையானது. ஐபோன் பயனர்களுக்காக MagSafe ஆதரவுடன் வருகிறது. நீங்க ஆண்ட்ராய்டு பயன்படுத்தினாலும் கவலை இல்லை. பெட்டியிலேயே கொடுக்கப்பட்டுள்ள MagSafe ரிங் உதவியுடன் இதை எந்த ஃபோனுடனும் எளிதாக இணைக்கலாம். USB-C கேபிள் மூலம், சான்டிஸ்க்-ன் ‘Memory Zone’ செயலி வழியாக உங்க ஃபோன் மற்றும் SSD-யை இணைக்கலாம். இதன்மூலம், நீங்க 4K தரத்தில் வீடியோ எடுக்கும் போதேகூட பைல்களை மிக எளிதாக டிரான்ஸ்பர் செய்யலாம்.சான்டிஸ்க் Creator Phone SSD ஆனது அதன் 70 கிராமுக்கும் குறைவான எடை மற்றும் USB Type-C இடைமுகம் மூலம் சிரமமில்லாத கோப்புப் பரிமாற்றத்திற்காகவே அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது. ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு போன்களின் கூடுதல் ஸ்டோரேஜுக்காக அதிக விலை கொடுக்க விரும்பாத, தொடர்ந்து வீடியோ கண்டெண்ட் உருவாக்கும் நபர்களுக்கு இது வரப்பிரசாதம்! இதன் விலை ரூ.10,999-லிருந்து தொடங்குகிறது. அதிகப் பணம் செலுத்தாமல், கூடுதல் ஸ்டோரேஜ் பெற இது புத்திசாலித்தனமான வழியாகும்.
