Connect with us

சினிமா

பிக்பாஸில் உருவான காதல் ஜோடிகள்..! என்னம்மா இப்படி பண்றீங்களே..

Published

on

Loading

பிக்பாஸில் உருவான காதல் ஜோடிகள்..! என்னம்மா இப்படி பண்றீங்களே..

விஜய் டிவியில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று  தற்போது ஒன்பதாவது சீசனை எட்டியுள்ளது. முதல் ஏழு சீசன்களையும் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், எட்டாவது சீசனில் இருந்து இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் கடந்த அக்டோபர் ஐந்தாம் திகதி பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது.  இதில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.  இந்த சீசன் ஆரம்பித்த முதல் நாள் இருந்து பிக்பாஸ் வீடு போர்க்களமாக காட்சி அளித்தது. தினமும் ஒவ்வொரு ஒவ்வொரு பிரச்சனைகளை ஹவுஸ் மேட்ஸ்  கிளப்புவார்கள். இந்த சீசனில் கலந்து கொண்ட நந்தினி, தன்னால் பொய்யான இடத்தில் இருக்க முடியாது என்று கூறி எவிக்ஷனுக்கு முன்பே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.  அதன் பின்பு  இந்த வாரம் பிக்பாஸில் இருந்து பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் உலா வரும் காதல் ஜோடிகள் பற்றி  இணையத்தில்  தகவல்கள் வைரலாகி வருகின்றன.  அதாவது  இந்த சீசனில் அதிகமான சோசியல் மீடியா பிரபலங்கள்  கலந்து கொண்டுள்ளனர். அதில் தற்போது  அரோரா – துஷார் ஜோடி ஒரு பக்கமும்,  ஆதிரை – எப்ஜே இன்னொரு பக்கமும்  தங்களுடைய காதல் லீலைகளை அரங்கேற்றி வருகின்றனர். இது நாளடைவில்  எவ்வாறு வளர்ச்சி அடையப் போகின்றது  என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு ஜோடிகள்  உருவாகுது வழமையாக  உள்ள நிலையில், தற்போது இவர்களும்  தங்களுடைய லீலைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன