Connect with us

சினிமா

ரஜினி, கமல் படங்களில் பணியாற்றிய பிரபலம் மறைவு.!

Published

on

Loading

ரஜினி, கமல் படங்களில் பணியாற்றிய பிரபலம் மறைவு.!

70 மற்றும் 80ம் ஆண்டுகளில் முன்னணி ஒளிப்பதிவாளராக திகழ்ந்தவர் பாபு.  இவர் எஸ்.பி முத்துராமன் இயக்கிய 45 படங்களுக்கு மேல்  ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் இந்தியிலும் பணியாற்றியுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பிரியா, முரட்டுக்காளை,  ஆறிலிருந்து அறுபது வரை,  ஸ்ரீ ராகவேந்திரா, நல்லவனுக்கு நல்லவன், புதுக்கவிதை, கழுகு,  போக்கிரி ராஜா  போன்ற படங்களிலும் கமலஹாசன் நடித்த சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே உள்ளிட்ட பல படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் இறுதியாக 2001 ஆம் ஆண்டு வெளியான தாலி காத்த காளியம்மன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த நிலையில்,  அபிராமபுரத்தில்  குடும்பத்துடன் வசித்து வந்த பாபுவுக்கு திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  தற்போது இவருடைய மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த பாபுவுக்கு விஷ்வநாத், ஸ்ரீதர் என்ற இரு மகன்கள் உள்ளனர்.  இவருடைய இறுதிச் சடங்குகள் இன்று இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன