Connect with us

பொழுதுபோக்கு

29 ஆண்டுக்கு பின் இயக்கிய படம்; தேவர் பட விழாவில் கோபத்தில் கத்திய கேப்டன் பட இயக்குனர்!

Published

on

Devar ang

Loading

29 ஆண்டுக்கு பின் இயக்கிய படம்; தேவர் பட விழாவில் கோபத்தில் கத்திய கேப்டன் பட இயக்குனர்!

தேசிய தலைவர் தேவர் என்ற பெயரில் தயாராகியுள்ள படம் குறித்த விழா சென்னையில் நடைபெற்ற நிலையில், இந்த விழாவில், பேசிய, நூலசிரியர் தவமணியின் பேச்சு குறித்து நிகழ்ச்சியில்சர்ச்சை ஏற்பட்டதால், அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.விஜயகாந்த் நடிப்பில் வெளியான ஊமை விழிகள் படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான அரவிந்த் ராஜ், அடுத்து உழவன் மகன், சத்யராஜ் நடிப்பில், தாய்நாடு, கறுப்பு நிலா, முஸ்தபா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக கடந்த 1996-ம் ஆண்டு நெப்போலியன் நடிப்பில் வெளியான முஸ்தபா என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு பிறகு சீரியல் ஒன்றை இயக்கிய அரவிந்த் ராஜ், 29 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்கியுள்ளார். தேசிய தலைவர் தேவர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின், டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் சென்னையில் நேற்று நடைபெற்றது. படத்தின் இயக்குநர் அரவிந்த்ராஜ், இயக்குநர்கள் ஆர்.வி.உதயக்குமார், பேரரசு, மோகன் ஜி, பஷீர், நடிகை கெளதமி, ஆர்.கே. சுரேஷ், கவிஞர் சினேகன், நூலாசிரியர் தவமணி, மற்றும் அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழக தலைவர் மூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய நூலாசிரியர் நவமணி, படத்தின் இயக்குநர் படத்தை திறன்பட எடுக்கவில்லை. இது வரலாறா உங்களின் கற்பனை கதையா? இதில் எது உண்மை? இது தெரியாமல் பலரும் தேவரை பற்றி படம் எடுத்துவிட்டார் என்று சொன்னால் அது பெரிய மோசடி இல்லையா? தேவரைப் பற்றி படம் எடுக்கும் போது, எதற்கு முன்னும் பின்னும் மாறி இருக்கிறீர்கள். சினிமாவைப் போல ஏன் இரட்டை வேடம் போடுகிறீர்கள்.இதுதான் வரலாறு என்றால், வரலாற்றை சொல்லுங்கள். இல்லை இது கற்பனை கதை என்றால் கற்பனை கதை என சொல்லுங்கள். நீங்கள் கற்பனையாக படம் எடுப்பதற்கு நாங்கள் ஆளில்லை. படத்தில் 52 இடங்களில் திருத்தங்கள் இருக்கின்றன. அவற்றை சரி செய்து செய்த பிறகே திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்று கூறினார். மேலும் நீங்கள் ஊமை விழிகள் போன்ற படம் எடுத்திருக்கலாம் என்று சொல்ல, மேடையில் இருந்த அரவிந்த் ராஜ் கோபத்தில் வெளியேறினார்.தேவர் பட விழாவில் நடந்த அடி தடி 😐 pic.twitter.com/Z1j0f8IHK5அவர் வெளியில் செல்லும்போது பேச தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார் என்று சொல்ல, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பேசிய அரவிந்த் ராஜ், தேவரை பற்றி தப்பாக பேசுகிறேன், சதி செய்கிறேன் என்று தவமணி சொன்னது மிகவும் தவறு, தேவர் தேவர்களுக்கு மட்டும் இல்லை, அனைவருக்கும் சொந்தக்காரர். எனக்குத் தெரிந்து சிவாஜி கணேசன், சங்கிலி முருகன் இருவர் மட்டுமே திரைத்துறையில் தேவர் சமூகத்தை சேர்ந்தவர்கள்.’தேவர் மகன்’ படத்தில் கமல் ஹாசன் கௌதமி, ரேவதி யாரும் தேவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் கிடையாது. அனைத்து மக்களுக்கும் பொதுவானவர் தேவர், கொண்டாடப்பட வேண்டிய தலைவர் என்று கூறியுள்ளார். அதேபோல் மேடையில் பேசிய, நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ், உண்மைக்கதையை படமாக எடுத்தாலும் இது கற்பனைக்கதை என்று தான் சென்சாரில் சொல்ல வேண்டும். தேவரை பற்றி தேவரே படம் எடுக்கவில்லை மாற்று சமூகத்தினர் எடுத்துள்ளார். உங்களுக்கு திருப்தி இல்லை என்றால், பார்ட் 2 எடுப்போம். அதை முக்குலத்தோர் சமூகத்தை நேர்ந்த நாங்களே தயாரிக்கிறோம் என்று பேசினார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன