சினிமா
எம்.ஜி.ஆர் போல மக்களுக்காகவே வாழ்கிறான் என் மகன்! விஜயை புகழ்ந்து தள்ளிய எஸ்.ஏ.சந்திரசேகர்
எம்.ஜி.ஆர் போல மக்களுக்காகவே வாழ்கிறான் என் மகன்! விஜயை புகழ்ந்து தள்ளிய எஸ்.ஏ.சந்திரசேகர்
தமிழ் சினிமா திரை உலகில் “இளைய தளபதி” என அழைக்கப்பட்ட விஜய், தற்போது தனது அரசியல் பயணத்திற்காக திரைத்துறையில் இருந்து விலகி, தன்னுடைய அரசியல் கட்சியை த.வெ.க என்ற பெயரில், புதிய தலைமுறையை இலக்காகக் கொண்ட ஒரு அமைப்பைத் தொடங்கியுள்ளார்.அவரது அரசியல் பயணத்தின் தொடக்கமே தமிழகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், அவரது தந்தையும், மூத்த இயக்குநரும், எழுத்தாளருமான S.A. சந்திரசேகர், மிகவும் உருக்கமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும், நடிகர் விஜயின் அரசியல் எண்ணங்களைப் பற்றி பேசியுள்ளார்.”எம்.ஜி.ஆர் தனக்காக வாழவில்லை ஆனால் அவரைப் போல அரசியல் வாதிகள் இன்றில்லை. அதுபோலவே, இன்று என் மகன் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு தமிழ் நாட்டு சரித்திரத்தில் இடம் பிடிக்க முயல்கிறான்…. என்பதை நினைக்கும் போது ஒரு தகப்பனா எனக்கு பெருமையாக இருக்கிறது.” என்று கூறியுள்ளார் S.A. சந்திரசேகர். இந்த உரையாடல், வலிமையான அரசியல் பின்னணியையும், விஜய் சமூகத்தின் மீது காட்டும் அக்கறையையும் வெளிப்படையாகக் காட்டுகிறது.
