இந்தியா
கோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரம்: ஸ்ரீசன் பார்மா நிறுவன உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்தது தமிழக அரசு
கோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரம்: ஸ்ரீசன் பார்மா நிறுவன உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்தது தமிழக அரசு
மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை உட்கொண்ட 24 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்வலையை ஏற்படுத்தியது. உயிரிழந்த குழந்தைகளின் சிறுநீரக திசுவில் டைஎத்திலீன் கிளைக்கால் எனும் வேதிப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையில், காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரத்திலுள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் இருமல் மருந்தில், தடை செய்யப்பட்ட ரசாயனம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.நச்சுத் தன்மையுள்ள ரசாயனம் கலந்த கோல்ட்ரிப் (coldrif Cough Syrup) என்ற இருமல் மருந்தே குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணம் எனவும், இந்த மருந்தை தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனம் தயாரித்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த ஸ்ரீசன் பார்மா நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் சென்னை அசோக் நகரில் கைது செய்யப்பட்டார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரங்கநாதனுக்கு, டிரான்சிட் வாரண்ட் வழங்கியதையடுத்து, மத்திய பிரதேசம் போலீசார் அவரை அம்மாநிலத்துக்கு அழைத்து சென்றனர்.இந்நிலையில், விஷத் தன்மை வாய்ந்த கலப்படம் செய்யப்பட்ட கோல்ட்ரிஃப் (Coldrif) என்ற இருமல் மருந்தை உற்பத்தி செய்த ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தை மூடவும், அதன் உற்பத்தி உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்யவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. விஷம் கலந்த இந்த இருமல் மருந்து மத்தியப் பிரதேசத்தில் உள்ள குழந்தைகள் உயிரிழப்புடன் தொடர்புடையது என்பதால், இந்த நடவடிக்கை எனத் தெரிகிறது.ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்மாநில மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் அந்த நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, இருமல் மருந்தில் 48.6% என்ற அதிகளவில் டைஎதிலீன் கிளைக்கால் (Diethylene Glycol – DEG) என்ற விஷத்தன்மை வாய்ந்த பொருள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கமேலும், நிறுவனத்தில் முறையான நல்ல உற்பத்தி நடைமுறைகள் (GMP) மற்றும் நல்ல ஆய்வக நடைமுறைகள் (GLP) பின்பற்றப்படவில்லை என்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இது தவிர, 300-க்கும் மேற்பட்ட மிக முக்கியமான மற்றும் பெரிய அளவிலான விதிமீறல்களையும் அதிகாரிகள் பதிவு செய்தனர்.உரிமையாளர் கைது மற்றும் இ.டி. சோதனைஇந்த நிறுவனத்தின் உரிமையாளரான ஜி. ரங்கநாதன் என்பவரை, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) சமீபத்தில் கைது செய்தது. இன்று முன்னதாக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், அமலாக்கத் துறை (Enforcement Directorate) அதிகாரிகள் Sresan Pharmaceuticals நிறுவன வளாகங்களிலும், சில அதிகாரிகளின் இல்லங்களிலும் சோதனை நடத்தினர்.”Sresan Pharmaceuticals-ன் மருந்து உற்பத்தி உரிமம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், நிறுவனம் மூடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மற்ற மருந்து உற்பத்தி ஆலைகளிலும் விரிவான ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது,” என்று மாநில அரசு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
