Connect with us

பொழுதுபோக்கு

சிக்கந்தர் தோல்விக்கு நான் காரணமா? அப்ப மதராஸி சூப்பர் பிளாக் பஸ்டர் – முருகதாஸை விமர்சித்த சல்மான்கான்

Published

on

salmankhan

Loading

சிக்கந்தர் தோல்விக்கு நான் காரணமா? அப்ப மதராஸி சூப்பர் பிளாக் பஸ்டர் – முருகதாஸை விமர்சித்த சல்மான்கான்

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி எப்படி பிரபலமாக உள்ளதோ அதேபோன்று இந்தியிலும் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த நிகழ்ச்சியினை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், நடிகர் சல்மான் கான், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கடுமையாக கிண்டல் செய்துள்ளார். அவர் கூறியதாவது, ”சமீப காலங்களில் எந்தப் படத்திலும் நடித்ததற்கு வருத்தப்படவில்லை. மக்கள் ‘சிக்கந்தர்’ படமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள், ஆனால் நான் அதை நம்பவில்லை. அப்படத்தின் கதை நன்றாக இருந்தது. அப்படத்தின் இயக்குநர் நான் இரவு 9 மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு வருவேன். அது தான் பிரச்சனைகளை உருவாக்கியது என்றார். ஆனால் அவர் ‘மதராஸி’ என்ற ஒரு படம் எடுத்தார். அதில் நடித்த ஹீரோ காலை 6 மணிக்கு எல்லாம் வந்துவிடுவார். அதான் அந்த படம் ‘சிக்கந்தரை’ விட பெரிய பிளாக் பஸ்டர் ஆகிவிட்டது” என்றார்.இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் பாலிவுட்டில் சல்மான் கான் நடிப்பில் ‘சிக்கந்தர்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இதையடுத்து நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், “ஒரு பெரிய நட்சத்திரத்துடன் ஷூட்டிங் செய்வது அவ்வளவு எளிதல்ல. அவர் இரவு 8 மணிக்குத்தான் செட்டிற்கு வருவார். அதனால் பகல் காட்சிகளைக்கூட நாங்கள் இரவு நேரத்தில்தான் படமாக்க வேண்டியிருந்தது. தமிழ் திரையுலகில் அதிகாலையிலேயே படப்பிடிப்புகளைத் தொடங்கும் பழக்கம் இருக்கிறது. பாலிவுட்டில் நட்சத்திரங்களின் நேரத்திற்கு ஏற்ப ஷூட்டிங் அட்டவணை மாறும். இந்த நிலைமை மற்ற நடிகர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தியது. ஒரு காட்சியில் 4 குழந்தைகள் இருந்தால், பள்ளி முடிந்து வரும் காட்சியைக்கூட நள்ளிரவு 2 மணிக்குத்தான் படமாக்க வேண்டி வந்தது. அந்த நேரத்தில் குழந்தைகள் சோர்வடைந்து தூங்கிவிடுவார்கள். படத்தின்  தோல்விக்கு நான்தான் முழு பொறுப்பு. நான் நினைத்த கதையை சரியாகத் திரையில் கொண்டு வரத் தவறிவிட்டேன்” என்றார்.இதையடுத்து, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மதராஸி’ திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தில்  நடிகர்கள் ருக்மினி வசந்த், வித்யுத் ஜம்வால் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படமாக பார்க்கப்பட்ட ‘மதராஸி’ திரைப்படம் பெரும் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன