Connect with us

பொழுதுபோக்கு

ஜெமினி சிம்பள், விக்ரம் அடக்கி வாசித்தார்; ஆனா படம் மீது எனக்கு நம்பிக்கை இல்ல: இயக்குனர் சரண் ஓபன் டாக்!

Published

on

Gemini Movie

Loading

ஜெமினி சிம்பள், விக்ரம் அடக்கி வாசித்தார்; ஆனா படம் மீது எனக்கு நம்பிக்கை இல்ல: இயக்குனர் சரண் ஓபன் டாக்!

அஜித் நடிப்பில் காதல் மன்னன், அமர்க்களம் என தொடர்ந்து 2 வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் சரண், விக்ரம் நடிப்பில் ஏ.வி.எம். நிறுவனத்திற்காக இயக்கிய படம் ஜெமினி. இந்த படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும், தொடக்கத்தில் படம் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் இருந்ததாக சரண் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.இயக்குநர் சரண் அவர்கள் தனது பேட்டியில், தான் அறிமுகப்படுத்திய நடிகை பூஜா குறித்துப் பேசும்போது, “என் படங்களில் பூஜாவைத் தவிர வேறு யாருமே இரண்டு படம் நடித்திருக்கவில்லை. பூஜா மட்டும்தான் இரண்டு படங்களில் நடித்திருக்கிறார்கள். மற்றபடி நான் படத்தில் வரும் கேரக்டருக்கு தேவையான முகம் இருக்கிறதா என்று பார்த்துத்தான் நடிகைகளைத் தேர்வு செய்கிறேன்.இன்றுவரை என் போனில் எந்தவொரு ஹீரோயின் நம்பரும் கிடையாது. அந்தப் படம் முடியும் வரைதான் அவர்களுடன் தொடர்பு இருக்கும். அது முடிந்தவுடன் எனக்கு அடுத்த படம், அடுத்த ஹீரோயின் என்று போய்விடும்.எனக்குக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், சிம்ரன். ஏனென்றால், நான் முதலில் சொன்ன 4 வரி கதையைப் புரிந்துகொண்டு, அதில் அந்தக் கேரக்டருக்கு ஒரு மதிப்பு இருக்கிறது என்று நினைத்து, படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.நான் கதை சொல்லும்போது  அவர் இரண்டு வருடத்திற்குத் டேட் இல்லை என்றாலும், அப்படி அட்ஜஸ்ட் பண்ணி, எனக்குப் பிச்சுப் பிச்சுக் கொடுத்து, ஒரு 18 நாட்களை வந்து அரை நாள், மூன்று மணி நேரம், இரண்டு நாள், ஒரு நாள் என்று கொடுத்தாங்க. அதில்தான் ‘பார்த்தேன் ரசித்தேன்’ படம் வந்தது. அந்த படத்தில் சிம்ரன் தனது கேரகடரை புரிந்துகொண்டு நடித்தார்.’ஜெமினி’ படம் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. படம் பண்ணும்போது அது ஒரு ‘ப்ராஸஸ்’ஸாக, எடிட்டிங் ரூம்ல அந்தப் படத்தைப் பார்க்கும்போது எரைச்சல் அதிகமாக பார்க்கிறோம். அந்த பைலட் ட்ராக்குடன் பார்க்கிறோம். டப்பிங் ஆனதற்கு அப்புறம் அந்தப் படம் வெறுமையாகத் தெரியும். வெறும் வசனங்கள் மட்டும்தான் இருக்கும். கிளாரிட்டி இருக்கும். ஆனால் ஏதோ மிஸ்ஸான மாதிரி இருக்கும் என்று அந்தப் படத்தில் தோணுச்சு.அதற்கு அப்புறம் எஃபெக்ட்ஸ், மியூசிக் இதெல்லாம் போட்டு, இந்த வெர்ஷன் நமக்கு பழகுவதற்கே கொஞ்சம் ஒரு டைம் ஆகும். இதெல்லாம் முடித்து, ஒரு ‘வாக்யூம் பீரியட்’ என்று வரும். லேப்க்கு போய்விட்டால், அப்புறம் அந்தப் படத்தில் கை வைக்கவே எதுவுமே இல்லை. ரிலீஸுக்கு 20 நாள் இருக்கு என்றபோது, அந்த 20 நாள் ‘வாக்யூம் பீரியட்’ என்பது ஒரு நரகம் தான். ஏனென்றால், இந்தப் படம் எப்படி இருக்கும், ஏற்றுக் கொள்வார்களா இல்லையா என்ற அந்தக் கலக்கம் நமக்கு அதிகமாக இருக்கும்.’ஜெமினி’ படம் பொருத்தவரை எனக்கு என்ன பெரிய ஒரு பாரம் என்றால், அது ஏவிஎம் நிறுவனத்துக்காக நான் பண்ணியது. 5 வருடம் படம் எடுக்காமல் இருந்து அவர்கள் ஜெமினி படம் பண்றாங்க. அந்தப் படம் வந்து நல்லா வரணும் என்று ஒரு அழுத்தம் என்மேல் இருந்தது. பிறகு அந்தப் படத்தைப் பொருத்தவரை எந்த டெம்ப்ளேட்டும் கிடையாது. ஏவிஎம் வரலாற்றில் மிகப் பெரிய ஹிட்டான எந்தப் படங்களின் சாயலும் அந்தப் படத்திற்குக் கிடையாது.அவர்கள் அதை கணக்கிட்டுப் பார்த்து, இது ‘சகலகாலா வல்லவன்’ மாதிரி இருக்கா, ‘முரட்டு காளை’ மாதிரி இருக்கா, ‘முந்தானை முடிச்சு’ மாதிரி இருக்கா இல்லை. இப்படி அவர்கள் பார்த்தால், அவர்களுக்கும் ஒட்ட மாட்டேங்குது. அப்ப எனக்கு அந்தப் பயம், பயங்கரமான பீதி அதிகமாகிவிட்டது. அதனால் எனக்குத் தூக்கம் வரவில்லை. அப்படியே ஒரு திக் திக் பயத்தில்தான் அந்தப் படம் வெளியானது. படமும் ரசிகர்களுக்குப் பிடித்துவிட்டது.இந்த பத்திற்காக நான் ஏவிஎம். உள்ளே நுழையும்போது, அவர்கள், “இந்தப் படத்தில் யாரும் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி வைக்காதீர்கள். எங்கள் பாலிசி அதுதான். நாங்கள் சிகரெட் பிடிப்பதை ஊக்குவிக்க மாட்டோம்” என்று சொன்னார்கள். அதனால் நான் ஒரு வெற்றிலை மட்டும் போட்டுட்டு, அதை மென்றுகொண்டே பேசுவது மாதிரி அது பண்ணும்போது, ரொம்ப இயல்பாக அமைந்தது. விக்ரம் சாருக்கு என்று ஒரு தனி உடல் மொழி, ஒரு கதாபாத்திரத்தை உள்வாங்குதல் எல்லாமே இருக்கும்.நான் சொன்னதை அதைச் சரியாக அவர் புரிந்துகொண்டு அந்தக் கேரக்டரை பண்ணியதிலேயே எனக்கு மிகவும் பிடித்தது. அவர் நினைத்திருந்தால் அது ரொம்ப மிகைப்படுத்தி ஒரு பெரிய ஆக்சன் ஹீரோவுக்கான தன்மையோடு எல்லாம் பண்ணியிருக்கலாம். அவர் அந்தக் கேரக்டரில் தன்னை ரொம்ப அடக்கி வாசித்தார். அதுதான் அந்தப் படத்தினுடைய மிகப்பெரிய வெற்றிக்கு ஒரு காரணம் என்று சொன்னால், அதுதான், அந்தக் குணம் தான்.படத்தில் அவர் செய்யும் அந்த ‘மேனரிசம்’ ஃபோட்டோ ஷூட் எடுக்கும்போது, எனக்கு ஏதாவது ஒரு ‘மேனரிசம்’ அந்தக் ஹீரோவுக்குக் கொடுக்கலாமே என்று தோணிக்கொண்டே இருந்தது. அப்ப நான், “இந்த மாதிரி வைத்தால் நல்லா இருக்கும் பாருங்கள்,” என்று சொன்னேன். அப்படி வைத்து அவர் அந்த போஸ் கொடுத்தது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. பிறகு நிறைய ஸ்டில்ஸ் எடுத்தோம். அதையும் ஏவிஎம் தேர்வு செய்தார்கள். விக்ரம் எந்த விழாவுக்குப் போனாலும், இதைச் செய்யாமல் வெளியே போக முடியாது என்று சரண் கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன