சினிமா
பரியேறும் பெருமாளில் நடிக்க மறுத்தேன்.. மீண்டும் அதே இயக்குநருடன் கூட்டணி.! அனுபமா
பரியேறும் பெருமாளில் நடிக்க மறுத்தேன்.. மீண்டும் அதே இயக்குநருடன் கூட்டணி.! அனுபமா
துருவ் விக்ரம் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள “பைசன் காளமாடன்”, அக்டோபர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவிருக்கிறது. இப்படத்திற்கு ‘பரியேறும் பெருமாள்’ மற்றும் ‘கர்ணன்’ படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்குநராக பணியாற்றியுள்ளார் என்பதே இதற்கான மிகப்பெரிய ஹைலைட்.இந்தப் படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கதைத்த நடிகை அனுபமா பரமேஸ்வரன், தனது உணர்ச்சிகளை ஒளிவு மறைவின்றி பகிர்ந்தார். குறிப்பாக, “பரியேறும் பெருமாள்” படத்தில் நடிக்க முடியாமல் போனது குறித்து வெளிப்படையாக பேசியது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.நிகழ்ச்சியில் தனது உரையை தொடங்கிய அனுபமா, “பரியேறும் பெருமாள் படத்தில் நடிக்க மாரி செல்வராஜ் சார் கேட்டிருந்தார். என்னால் அந்த சமயம் அப்படத்தில் நடிக்க முடியவில்லை… எனினும் பரியேறும் பெருமாள் படத்தில் நடிக்காததை நினைத்து ரொம்ப கவலைப்பட்டிருக்கேன்….பரியேறும் பெருமாள் படம் என்னுடைய அப்பாவுக்கும் எனக்கும் ரொம்ப பிடிச்ச படம். பரியேறும் பெருமாள் படத்தில் நடிக்க தவறினாலும் மீண்டும் பைசன் படம் மூலம் மாரி செல்வராஜூடன் இணைவதற்கான வாய்ப்பு கிடைத்தது ரொம்பவே மகிழ்ச்சியளிக்கிறது..” என்றார். இந்த உரையின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்களிடமிருந்து பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது.
