Connect with us

பொழுதுபோக்கு

பிக்பாஸ் சீசன் 9: உங்களிடம் பேசுவது சுவரிடம் பேசுவதற்கு சமம்… வி.ஜே.பாருவை வச்சி செய்த கனி

Published

on

kani

Loading

பிக்பாஸ் சீசன் 9: உங்களிடம் பேசுவது சுவரிடம் பேசுவதற்கு சமம்… வி.ஜே.பாருவை வச்சி செய்த கனி

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி மிகபிரமாண்டமாக கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது. 20 போட்டியாளர்களை கொண்ட இந்த நிகழ்ச்சி காரசார விவாதங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சி தொடங்கிய ஒரு வாரத்திலேயே பல்வேறு விவாதங்கள், பிரச்சனைகள் என பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நந்தினி சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் என்னால் இருக்க முடியாது என்று வெளியேறினார்.இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் பலரும் அவர் சிம்பதிக்காக தான் இவ்வாறு செய்ததாக விமர்சித்தனர். தொடர்ந்து, சனிக்கிழமை விஜய் சேதுபதி எண்ட்ரியின் போது போட்டியாளர்கள் தங்களை அறிமுகப்படுத்தினர். அப்போது அனைவரும் தங்களை எழுந்து நின்று அறிமுகப்படுத்திய நிலையில் ஆதிரை இருக்கையில் இருந்து கொண்டே தன்னை அறிமுகப்படுத்தினார். இதனால் கடுப்பான விஜய் சேதுபதி இது எல்லாம் நல்லதுக்கு இல்லை என்று கூறினார்.இதை பார்த்த நெட்டிசன்கள் இது என்ன பள்ளிக் கூடமா எழுந்து நின்று அறிமுகப்படுத்த என்று கமெண்ட் செய்து வந்தனர். இதைத்தொடர்ந்து, பார்வதியின் தவறுகளை சக போட்டியாளர்கள் சுட்டிக் காட்டிய போது அதை அவர் சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தார். இதை பார்த்த விஜய் சேதுபதி இது வெளியில் உங்களை எப்படி நினைக்கிறார்கள் என்பது குறித்து சொல்கிறார்கள். இதை கூலாக எடுத்துக் கொள்வது உங்கள் விருப்பம் இருந்தாலும் இது நல்லதுக்கு இல்லை என்று கூறினார். இப்படி போட்டியாளர்களை லெஃப்ட், ரைட் வாங்கி வருகிறார் விஜய் சேதுபதி.A post shared by Vijay Television (@vijaytelevision)கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து பிரவீன் காந்தி எலிமினேட் செய்யப்பட்டார். இன்று வெளியான முதல் ப்ரோமோவில் சாப்பாட்டிற்காக சபரிக்கும், திவாகருக்கும் பிரச்சனை நடக்கிறது. ஒரு கட்டத்தில் கடுப்பான திவாகர் அவரவர் தனிப்பட்ட பிரச்சனைகளை சாப்பாட்டில் தான் காட்டுகிறார்கள். ஆள் பார்த்து சாப்பாடு வைக்கிறார்கள் என்று கத்திக் கொண்டே செல்கிறார் இத்துடன் இந்த ப்ரொமோ முடிகிறது.இதையடுத்து, வெளியான இரண்டாவது ப்ரோமோவில், கிச்சன் மேஜை மீது வி.ஜே. பார்வதி அமர்ந்திருக்கிறார். அவரை இறங்குமாறு அனைவரும் கூறுகின்றனர். அதற்கு வி.ஜே.பார்வதி யாரையும் இந்த கிச்சன் ஏரியாவில் வரக்கூடாது என்று சொல்வதற்கு என்ன நியாயம் என்று கேட்கிறார். இதற்கு சூப்பர் டீலக்ஸிற்கு எந்த கொம்பும் முளைக்கவில்லை. நீங்கள் அநியாயமாக ஒன்று செய்வீர்கள் அதை யாரும் கேட்கவே கூடாது. பாக்காமலேயே போய்விட வேண்டும். A post shared by Vijay Television (@vijaytelevision)அந்த அநியாயமாக பண்ணிவிட்டு என்னை கார்னர் செய்கிறார்கள் என்று நீங்கள் ஒரு சீனை கிரியேட் செய்வீர்கள் அதை நாங்கள் வாயை மூடிக் கொண்டு கேட்டுவிட்டு போக முடியாது. நல்ல அறிவு இருப்பவர்களுக்கு உள்ளே இறங்கும் புத்தி இல்லாதவர்களுக்கு உள்ளே இறங்காது. உங்களிடம் பேசுவது சுவரிடம் பேசுவதற்கு சமம் என்று கூறுகிறார். இதனுடன் இந்த ப்ரோமோ முடிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன