Connect with us

சினிமா

இந்த வருஷம் நான் நடிச்சு 350 கோடி வசூலிச்சது அவருக்கு தெரியாதுல்ல .. பயில்வானுக்கு பதிலடி

Published

on

Loading

இந்த வருஷம் நான் நடிச்சு 350 கோடி வசூலிச்சது அவருக்கு தெரியாதுல்ல .. பயில்வானுக்கு பதிலடி

தமிழ் சினிமாவில் முன்னணி   நடிகைகளுள் ஒருவராக  திகழ்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.  இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி படத்தில் சிறிய கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதை தொடர்ந்து காக்கா முட்டை, தர்மதுரை, வடசென்னை,  கனா,  ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், லட்சுமி, சாமி 2, செக்கச் சிவந்த வானம்,  பொன்னியின் செல்வன்,  குற்றமே தண்டனை என ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில்,  சென்னையில் நடந்த மொய் விருந்து நிகழ்ச்சியில் தனக்கு பட வாய்ப்பு இல்லை என்று பயில்வான் விமர்சனம் செய்ததற்கு பதிலடி கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.அதன்படி அவர் கூறுகையில், எனக்கு படங்கள் இல்லை என ஒரு செய்தி பரவியது. நான் தெலுங்கு சினிமாவில் பிஸியாக இருக்கின்றேன். அங்கு நான் நடித்த  படம் ஒன்று 350 கோடி வசூலித்தது.  அதுவும் இந்த வருஷம் ரிலீஸ் ஆகி  வசூல் ஆகி இருக்கிறது. இது பயில்வானுக்கு தெரியாதுல. என் படங்கள் எல்லாம் சமூகப் பொறுப்பில் உள்ள படமா தான் இருக்கும். மக்களுக்கு நல்ல படங்களை கொடுக்கணும்.. ஏனோ தானோ என்று நடிக்க மாட்டேன். அதனாலதான் இந்த கேப்.. சினிமாவை நான் விடமாட்டேன்.. சினிமாவும் என்னை விடாது என்று நம்புகின்றேன்.  மேலும் மொய் விருந்து மாதிரி என்னுடைய திருமண விருந்தும் விரைவில் நடக்கும்.  ஆதரவற்றவர்களுக்கு பலரிடம் உதவி கேட்டேன். ஆனால் சிலர் மட்டுமே உதவினர்.  எனினும் இதன் போது பலரது உண்மை முகத்தை தெரிந்து கொண்டேன். அதற்காக கவலைப்படவில்லை. நாம் நன்றாக இருக்கும் போது பலர் வருவார்கள். ஆனால் நம் கஷ்டத்தில் சிலர் தான் வருவார்கள். அவர்களை மறக்கக்கூடாது என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன