தொழில்நுட்பம்
‘உள்நாட்டுத் தயாரிப்பு, அதை யூஸ் பண்ணுங்க’… வாட்ஸ்அப் பிளாக் வழக்கில் ‘அரட்டை’ ஆஃப்-ஐ பரிந்துரைத்த சுப்ரீம் கோர்ட்!
‘உள்நாட்டுத் தயாரிப்பு, அதை யூஸ் பண்ணுங்க’… வாட்ஸ்அப் பிளாக் வழக்கில் ‘அரட்டை’ ஆஃப்-ஐ பரிந்துரைத்த சுப்ரீம் கோர்ட்!
வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனத்தால் முடக்கப்பட்ட மருத்துவரின் அக்கவுண்ட்-ஐ தடை நீக்கம் (unblock) செய்யுமாறு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதற்குப் பதிலாக, அவர் உள்நாட்டுத் (indigenous) தயாரிப்பான அரட்டை (Arattai) போன்ற பிற மெஜேஜ் (messaging) தளங்களைப் பயன்படுத்தலாம் என்று அவருக்கு நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.மனுதாரர் ரமன் குந்த்ரா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மகாலட்சுமி பவானி, நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வுக்கு முன்னால் அக்.10 அன்று ஒரு வாதத்தை முன்வைத்தார். அதில், வாட்ஸ்அப்பின் “தன்னிச்சையான” (arbitrary) இந்த நடவடிக்கை மனு தாரரின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது என்று தெரிவித்தார். மனுவில், “2025 செப்டம்பர் 13 அன்று மாலையில் அவரது அக்கவுண்ட் முடக்கப்பட்டது. அவர் மறுஆய்வு (review) கோரிய பிறகு, செப்.14 அன்று மாலையில் அந்த அக்கவுண்ட் தொடர்ந்து முடக்கப்பட்டிருக்கும் என்று அவருக்குத் தெரிவிக்கப்பட்டது” எனக் கூறப்பட்டிருந்தது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கஅப்போது, நீதிபதி மேத்தா மூத்த வழக்கறிஞரிடம், “வாட்ஸ்அப்பை அணுக உங்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமை என்ன?” என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, நீதிபதி நாத், “வேறு தகவல்தொடர்பு ஆஃப்கள் உள்ளன, நீங்க அரட்டையைப் பயன்படுத்தலாம்,” என்று கூறினார். மேலும், “அரட்டை (Arattai) என்ற ஒரு ஆஃப் உள்ளது… அதைப் பயன்படுத்துங்கள்,” என்று குறிப்பிட்ட நீதிபதி நாத், அந்த செயலி இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டினார்.தமிழ்நாட்டைச் சேர்ந்த சோஹோ நிறுவனம் ‘அரட்டை’ என்ற புதிய மெசேஜிங் ஆஃப்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் முக்கிய நோக்கம், குறைந்த திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களிலும் மற்றும் மெதுவான இணைய இணைப்பு உள்ள பகுதிகளிலும் தடையின்றி இயங்கும். “அரட்டை” (Arattai) ஆப் உங்க சாதனத்தைப் பொறுத்து, கூகிள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோர், அல்லது மைக்ரோசாஃப்ட் ஸ்டோர் போன்ற அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோர்களில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். மேலும், இதன் அதிகாரப்பூர்வ இணையதளமான அரட்டை.in வழியாகவும் ஆண்ட்ராய்டு, விண்டோஸ் மற்றும் லினக்ஸ் போன்றவற்றுக்கு பதிவிறக்கம் செய்ய முடியும்.
