இலங்கை
கோட்டாபய ராஜபக்ஷவின் வீடு பறிப்பு!
கோட்டாபய ராஜபக்ஷவின் வீடு பறிப்பு!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாக கூறப்படும் கதிர்காமத்தில் மெனிக் கங்கைக்கு அருகில் உள்ள வீடு நீதிமன்றத்தால் திங்கட்கிழமை (13) அன்று நீர்ப்பாசனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
குற்றப் புலனாய்வுத் துறையால் வழக்குத் தாக்கல் செய்ததற்கமைய குறித்த கட்டிடம் அரசாங்கத்திடம் வழங்கப்பட்டது.
மொனராகலை நீர்ப்பாசன இயக்குநர் அப்துல் ஜப்பார் குறித்த கட்டிடத்தைக் கையகப்படுத்தினார்.
அத்துடன் இந்தக் கட்டிடம் அரசாங்க அதிகாரிகளுக்கான தங்குமிடமாக பயன்படுத்தப்படும் எனவும், அதிலிருந்து அரசாங்கத்திற்கு வருமானம் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
