பொழுதுபோக்கு
சார் உங்க வயசு என்ன? சரத்குமாரிடம் கேட்ட பிரதீப்; இளமைக்கு ஐடியா கொடுத்த சூப்பர் ஹீரோ!
சார் உங்க வயசு என்ன? சரத்குமாரிடம் கேட்ட பிரதீப்; இளமைக்கு ஐடியா கொடுத்த சூப்பர் ஹீரோ!
தமிழ் சினிமாவில் இதுவரை 2 படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள பிரதீப் ரங்கநாதன், நடிப்பில் அடுத்த வெளியாக உள்ள டியூட் படத்தில் நடிகர் சரத்குமாருடன் இணைந்து நடித்துள்ளார். இதில் இவர் சரத்குமாரிடம் வயது என்ன என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில் குறித்து பேசியுள்ளார்.ரவி மோகன் நடித்த கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதன்பிறகு லவ் டுடே என்ற படத்தை இயக்கி தானே ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்து ரசிகர்கள் மத்தியில் அவருக்கு பெரிய பாராட்டுக்களையும், ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி தந்தது. இந்த படத்தில் நடிகர் சத்யராஜூவுடன் அவர் நடித்திருந்தார்,அடுத்து அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ட்ராகன் என்ற படத்தில் நடித்திருந்தார், இந்த படத்தில் 5 இயக்குனர்கள் நடித்திருந்தனர். இந்த படமும் பெரிய வெற்றியை கொடுத்து முன்னணி நடிகராக மாறிய பிரதீப் தற்போது டியுட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு வரும் அக்டோபர் 17-ந தேதி வெளியாக உள்ள நிலையில், படம் தொடர்பான நட்சத்திரங்கள் பலரும் யூடியூப் சேனல்களில் பேசி வருகின்றனர். படத்திற்காக நிகழ்ச்சியும் சமீபத்தில் நடத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதீப் ரங்கராதன், நான் பார்த்து வளர்ந்த ஹீரோக்களுடன் நடிப்பேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. முதலில் எனது லவ் டுடே படத்தில் அர்ஜூனா அர்ஜூனா படலை வைக்க ஒப்புக்கொண்டதற்கு நன்றி சார் என்று சரத்குமார் பற்றி பேசினார். இதில் நான் அவரை ஷூட்டிங்கில் பார்த்தபோது இவருக்கு வயது என்ன இருக்கும் என்று யோசித்தேன். அதன்பிறகு அவரிடமே என்று சார் உங்கள் வயது என்ன என்று கேட்டேன். அப்போது அவர் ஒரு நம்பர் சொன்னார்.A post shared by News18 Tamil Nadu (@news18tamilnadu)அவர் சொன்னதை கேட்டு நான் பிரமித்து போனேன். சார் நீங்கள் இப்படி இருப்பதற்கு என்ன காரணம் என்று கேட்டபோது தினமும் காலை எழுந்தவுடன் பீட்ரூட் ஜூஸ் குடிக்கினறேன் என்று சொன்னார். அவர் சொன்னதில் இருந்து நானும் பீட்ரூட் ஜூஸ் குடிக்க தொடங்கி இருக்கிறேன். அவர் வயதில் வரும்போது நானும் அப்படி இருந்தால் சந்தோஷம் தான் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
