Connect with us

பொழுதுபோக்கு

ஜாய் கிறிஸில்டா கொடுத்த பரபர புகார்: மாதம்பட்டி ரங்கராஜூக்கு மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு

Published

on

Madhampattu

Loading

ஜாய் கிறிஸில்டா கொடுத்த பரபர புகார்: மாதம்பட்டி ரங்கராஜூக்கு மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு

நடிகரும் சமையல் கலைருமான மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா திருமணம் தொடர்பான பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தனது குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா என்று கூறி அவர் மீது கிரிசில்டா மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இது குறித்து மகளிர் ஆணையம் மாதம்பட்டி ரங்கராஜ்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது,தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் உலகளவில் பல பிரபலங்களின் திருணத்திற்கு கேட்ரிங் சர்வீஸ் செய்து அசத்தி வருபவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், அடுத்து பென்குயின் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், ரங்கராஜ் நடுவராக பங்கேற்று வரும் நிலையில், இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஸ்ருதி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.இதனிடையே, தனது காஸ்டியூம் டிசைனரான ஜாய் கிரிசில்டாவை 2-வது திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ஜாய் கிரிசில்டா, தான் ரங்கராஜ் குழந்தையை வயிற்றில் சுமப்பதாகவும், தற்போது தன்னுடன் வாழ மறுக்கிறார் என்று ரங்கராஜ் மீது புகார் அளித்திருந்தார். இந்த தகவல்கள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், இந்த புகார் குறித்து காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ள ஜாய் கிரிசில்டா, தற்போது மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். அப்போது, இந்த புகார் குறித்து எனக்கு மிரட்டல் எதுவும் வரவில்லை. அதே சமயம் இந்த குழந்தைக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எனக்கும் என் குழந்தைக்கும் எது நடந்தாலும், அதற்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். இதனிடையே கிரிசில்டா மகளிர் ஆணையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரங்கராஜ்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கிரிசில்டா கொடுத்த புகார் காரணமாக விசாரணை நடத்த நாளை (அக்டோபர் 15) மாதம்பட்டி ரங்கராஜ் மகளிர் ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன