பொழுதுபோக்கு
தலைத்தெறிக்க ஓடிய பிக்பாஸ் போட்டியாளர்கள்… கீழே விழுந்த வினோத்; வைரலாகும் வீடியோ
தலைத்தெறிக்க ஓடிய பிக்பாஸ் போட்டியாளர்கள்… கீழே விழுந்த வினோத்; வைரலாகும் வீடியோ
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 20 போட்டியாளர்களை கொண்ட இந்த நிகழ்ச்சி காரசார விவாதங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே பிக்பாஸ் வீட்டில் பிரச்சனைகள் வெடித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நந்தினி சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் என்னால் இருக்க முடியாது என்று வெளியேறினார்.இதைத்தொடர்ந்து, முதல் வார நாமினேஷனில் பிரவீன் காந்தி வெளியேறினார். எதற்கெடுத்தாலும் பிரச்சனை தான் தீர்வு என்ற கோணத்தில் பிக்பாஸ் வீட்டு போட்டியாளர்கள் செயல்பட்டு வருவதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலும் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரையை போட்டியாளர்கள் குறித்து வைத்து தாக்குவதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளது.இப்படி பிக்பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் பிரச்சனைகள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல், தற்போது பிக்பாஸ் வீட்டில் நடந்துள்ள ஒரு நிகழ்ச்சியால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அதாவது, வாட்டர்மெலன் ஸ்டார் திவாகருக்கு பலூன் அக்கா அரோரா, பிக்பாஸ் வீடு – சூப்பர் டீலக்ஸ் வீடு இரண்டிற்கும் இடையே உள்ள கண்ணாடி வழியாக முத்தம் கொடுத்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்குது. ஏன் இப்படி பப்ளிக்கா செய்றாங்க என்று கண்டன குரல் எழுப்பி வருகின்றனர். பிக்பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு முன் வாட்டார் மெலன் ஸ்டார் திவாகர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும் தற்போது அவருக்கு ஃபாலோவர்ஸுகள் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியானது. அதாவது, கார்டர்ன் ஏரியாவில் பதினெட்டு மாஸ்க் இருக்கும்.#Day9#Promo1 of #BiggBossTamilBigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9#OnnumePuriyala#BiggBossSeason9Tamil#BiggBoss9#BiggBossSeason9#VijaySethupathi#BiggBossTamil#BB9#BiggBossSeason9#VijayTV#VijayTelevisionpic.twitter.com/NFtIfftinLஆனால், கார்டனில் பதினேழு ஸ்டாட் தான் இருக்கும் . பசர் அடித்ததும் போட்டியாளர்கள் இந்த மாஸ்கை எடுத்துக் கொண்டு அந்த ஸ்லாட்டில் வைக்க வேண்டும். ஸ்லாட்டில் வைக்காத 18-வது ஆள் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று பார்வதி அறிக்கையை படிக்கிறார். பசர் அடித்ததும் போட்டியாளர்கள் ஸ்லாட்டில் மாஸ்கை வைப்பதற்காக ஓடுகிறார்கள். அப்போது வினோத் கீழே விழுந்து காலில் அடிபடுகிறது. இத்துடன் இந்த ப்ரொமோ முடிவடைகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
