பொழுதுபோக்கு
பிக்பாஸ் சீசன் 9: திவாகருக்கு முத்தம் கொடுத்த பலூன் அக்கா… புலம்பும் ரசிகர்கள்
பிக்பாஸ் சீசன் 9: திவாகருக்கு முத்தம் கொடுத்த பலூன் அக்கா… புலம்பும் ரசிகர்கள்
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 20 போட்டியாளர்களை கொண்ட இந்த நிகழ்ச்சி காரசார விவாதங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே பிக்பாஸ் வீட்டில் பிரச்சனைகள் வெடித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நந்தினி சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் என்னால் இருக்க முடியாது என்று வெளியேறினார்.இதைத்தொடர்ந்து, முதல் வார நாமினேஷனில் பிரவீன் காந்தி வெளியேறினார். எதற்கெடுத்தாலும் பிரச்சனை தான் தீர்வு என்ற கோணத்தில் பிக்பாஸ் வீட்டு போட்டியாளர்கள் செயல்பட்டு வருவதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலும் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரையை போட்டியாளர்கள் குறித்து வைத்து தாக்குவதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளது.இப்படி பிக்பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் பிரச்சனைகள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டில் நடந்துள்ள ஒரு நிகழ்ச்சியால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அதாவது, வாட்டர்மெலன் ஸ்டார் திவாகருக்கு பலூன் அக்கா அரோரா, பிக்பாஸ் வீடு – சூப்பர் டீலக்ஸ் வீடு இரண்டிற்கும் இடையே உள்ள கண்ணாடி வழியாக முத்தம் கொடுத்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்குது. ஏன் இப்படி பப்ளிக்கா செய்றாங்க என்று கண்டன குரல் எழுப்பி வருகின்றனர். பிக்பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு முன் வாட்டார் மெலன் ஸ்டார் திவாகர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும் தற்போது அவருக்கு ஃபாலோவர்ஸுகள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.முன்னதாக, பிக்பாஸ் வீட்டு மக்களுக்கும் சூப்பர் டீலக்ஸ் வீட்டு மக்களும் சண்டைகள் நடந்தது. அதாவது கிச்சன் மேஜை மீது வி.ஜே. பார்வதி அமர்ந்திருக்கிறார். அவரை இறங்குமாறு அனைவரும் கூறுகின்றனர். அதற்கு வி.ஜே.பார்வதி யாரையும் இந்த கிச்சன் ஏரியாவில் வரக்கூடாது என்று சொல்வதற்கு என்ன நியாயம் என்று கேட்கிறார். இதற்கு சூப்பர் டீலக்ஸிற்கு எந்த கொம்பும் முளைக்கவில்லை. நீங்கள் அநியாயமாக ஒன்று செய்வீர்கள் அதை யாரும் கேட்கவே கூடாது. பாக்காமலேயே போய்விட வேண்டும். #Diwakar ♥️ #Aurora :: Favorite couple in the house.! 🫰❤️#BiggBossTamil9#BiggBossTamil#BiggBoss9Tamilpic.twitter.com/sDJ7cuQKggஅநியாயமாக பண்ணிவிட்டு என்னை கார்னர் செய்கிறார்கள் என்று நீங்கள் ஒரு சீனை கிரியேட் செய்வீர்கள் அதை நாங்கள் வாயை மூடிக் கொண்டு கேட்டுவிட்டு போக முடியாது. நல்ல அறிவு இருப்பவர்களுக்கு உள்ளே இறங்கும் புத்தி இல்லாதவர்களுக்கு உள்ளே இறங்காது. உங்களிடம் பேசுவது சுவரிடம் பேசுவதற்கு சமம் என்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
