Connect with us

இலங்கை

வெளிநாடு அனுப்புவதாக பலகோடி சுருட்டிய யாழ் நபர்; ஏமாந்து நிற்கும் மக்கள்!

Published

on

Loading

வெளிநாடு அனுப்புவதாக பலகோடி சுருட்டிய யாழ் நபர்; ஏமாந்து நிற்கும் மக்கள்!

  யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நான்கு முறைப்பாடுகளும், வவுனியாவில் நான்கு முறைப்பாடுகளும் காணப்படுகின்றன.

Advertisement

இது குறித்து யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அந்த விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபரை நேற்று திங்கட்கிழமை (13) கைது செய்தனர்.

கைது செய்து விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

Advertisement

அதேவேளை வடக்கில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில்  ஐரோப்பா, கனடா செல்லும்  வெளிநாடு செல்லும் மோகம் , இளைஞர் யுவதிகளிடையே அதிகரித்துள்ள நிலையில் , இதனால் பல கோடிகளை இழக்கும் சம்பவங்களும் அதிகரித்து செல்கிறது.

இது தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்தும் , மக்களின் வெளிநாட்டு மோகம் தீரவில்லை என சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன