இலங்கை
வேலை வாய்ப்புகளைக் கண்டறிய மெட்டாவின் புதிய முயற்சி
வேலை வாய்ப்புகளைக் கண்டறிய மெட்டாவின் புதிய முயற்சி
ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, ஒரு காலத்தில் பிரபலமாக இருந்து பின்னர் இடை நிறுத்தப்பட்ட ஒரு அம்சத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி வேலை வாய்ப்புகளைக் கண்டறிவதற்கான புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
குறித்த நிறுவனம் குறித்த சேவையை முதன்முதலில் 2017இல் அறிமுகப்படுத்தியது.
ஆனால் ஐந்து ஆண்டுகளுக்குள் அதை நிறுத்தியது.
இந்தநிலையில் குறித்த அம்சத்தை மீண்டும் அறிமுகப்படுத்த மெட்டா நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதனை ஃபேஸ்புக்கின் Marketplace பிரிவில் பார்வையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
