இலங்கை
அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிக்கும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள்!
அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிக்கும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள்!
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இரத்தினப்புரி மாவட்டத்தில் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்ற இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
குறித்த மாவட்டத்தில் 15,000 குடும்பங்கள் அபாயகரமான பகுதிகளில் வசிக்கின்றன.
எனினும், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் 2,763 குடும்பங்கள் வசிப்பதாகவும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
