இலங்கை
இலங்கையில் வரலாறு காணாத உச்சம் தொடும் தங்கம் விலை!
இலங்கையில் வரலாறு காணாத உச்சம் தொடும் தங்கம் விலை!
வரலாறு காணாதளவு நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தங்கம் விலையால் நகைப்பிரியர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (15) 5,000 ரூபாயால் உயர்ந்துள்ளதாக சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்று (15) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தையில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 3,42,300 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேவேளை, நேற்றை தினம் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 337,600 ரூபாயாக காணப்பட்டது.
இதற்கிடையில், நேற்று (14) 3,65,000 ரூபாயாக இருந்த கரட் ஒரு பவுன் தங்கத்தி விலை, இன்று (15) 3,70,000 ரூபாயாக உயர்ந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தை தரவுகள் மேலும் தெரிவிக்கின்றன.
